வெளிநாட்டு வேலை ! ! !
வளமிக்க தேசத்தில்விலையானது வேலை!
வாலிபன் நான்வழியற்று நிற்கையில்
விடியலாய் ஒரு விளம்பரம்.
விலையில்லாதவிசா! இதோ!

பாலைமணலை ஈரமாக்கியது என்வியர்வை துளிகள்.
கண்ணுக்கெட்டா தூரத்தில் என் மகன் கஸ்டப்படுகிறான்,
இது என் பெற்றோரின் ஏக்கம்.

துபாய் போய் விட்டான், இனி பணமழைதான்.
இமையை உயர்த்தி சமுகம்இப்படி பார்க்கும்.
தங்;கையின் திருமணம்மகிழ்ந்தேன்;.

தந்தையின் மரணம்மனம் நொந்தேன்நேரில் பார்த்ததல்ல போனில் கேட்டு, முண்றாண்டுக்கு ஒரு முறைமுன்று மாத விடுப்பு.

இருபத்திரெண்டாய் சென்றவன் இருபத்தி ஐந்தாய் திரும்பினேன்.
திரும்பியதும் என் திருமணம் மாதம் முன்று கடந்து,
மறந்திருந்தது அயல் நாடுமறுபடி நினைவில் எழுந்தது.

மகிழ்ச்சிக்கு வேலி போட்டு, மனையாளை தனியே விட்டு, கை அசைக்கச் சென்றேன்காசு அனுப்பி வைக்க சென்றேன். பொருளாதாரத்தை தேடிச் சென்ற எனக்குபொருளே தூரமாகியது.

என் தாரத்திற்கு ஒவ்வொரு பொழுதும்தூரமாகியது.
இளமையை தியர்கித்து இளநரை தளிர்விட்டு தாயகம் திரும்பினேன்.


விடு வந்ததும், வாசலில் ஒரு இளம்பிஞ்சு!
அன்பின் மிகுதியால் வாரியணைக்கச் சென்றேன்அறியாதவன் என்பதால் அச்சம் மேலிட்டு அம்மா என்றழைத்தது.

அழுது கொண்டே ஓடியது என் ஆசை வாரிசுபெற்ற பிள்ளைக்கே பெற்றவன் இவனென்று அறிமுகம் செய்ய வேண்டிய அவலத்தை நினைத்துமனம் வெதும்பினேன்.

மறுமுறை செல்லுகிறமனப்போக்கை விட்டுவிட்டுமகிழ்ச்சியின் உச்சத்தில் மகளோடு கொஞ்சுகையில், என் மகளின் மணக்கோலம் நினைவில் முன்னோட்டம் ஆனது மறுதிங்களே புறப்பட்டேன் மிஞ்சிய இளமையையும் தியாகிக்க …

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in அ முதல் ஃ வரை அம்மா, சிந்தனை கவிதைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s