சில நகைச்சுவை கதைகள் !!!

கதை :1

அம்மாஞ்சியும் அவன் நண்பரும் ஒரு நாள் மீன் பிடிக்க படகு ஒன்றை எடுத்துக்கொண்டுகடலுக்குள் போனார்கள். முதலில் ஒரு இடத்தில் அவ்வளவாக மீன்கள் கிட்டவில்லை.பிறகு நெடுந்தூரம் கடலுக்குள் போனார்கள்.

அங்கு நிறைய மீன் கிடைத்தது. அம்மாஞ்சியின்நண்பன் சொன்னான் ” நாளைக்கும் இதே இடத்துக்கு வருவோம்” என்றான். அம்மாஞ்சியும்சந்தோஷமாக ஒத்து கொண்டான். ஆனால் அம்மாஞ்சின் நண்பன் உடனே ஒரு சந்தேகத்தைகிளப்பினான். “நாளைக்கு வர்ரதுக்கு எப்படிடா இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கறது…?”என்றான்.

கொஞ்ச நேரம் யோசித்த அம்மாஞ்சி சடாரென கடலுக்குள் குதித்து மூழ்கி கொஞ்சநேரம் கழித்து மேலே வந்தான். “எங்கடா போயிட்டு வர்றே..? எனகேட்ட நண்பனுக்குஅம்மாஞ்சி பெருமையாக சொன்னான். ” படகுக்கு அடியில போய் அடையாள குறி போட்டுட்டுவர்ரேன்..நாளைக்கு இதை வச்சி இந்த இடத்துக்கு வந்துடலாம்”.*******கதை : 2


அம்மாஞ்சி எப்போதுமே எல்லாவற்றிலும் கவனக்குறைவாக இருப்பதாய் அவன் மனைவி குறைபட்டுக் கொண்டாள். அதிலிருந்து கொஞ்சம் கவனமாக இருக்க அம்மாஞ்சி முடிவுசெய்தான்.

ஒரு நாள் பஸ்ஸில் வரும்போது நடத்துனரிடம் இரண்டு டிக்கெட்கள் எடுத்தான்.அருகிலிருந்த அவனுக்கு தெரிந்த ஒருவர் ‘ஏன் 2 டிக்கெட் எடுக்கறீங்க…? ‘ என்றார்”ஒண்ணு மிஸ்ஸானாலும் ஒன்னை வச்சுக்கலாம்ல…””ரெண்டுமே மிஸ்ஸாயிடுச்சின்னா…?””அதுக்குதான் பணம் வச்சிருக்கேனே…

“”பணத்தை யாரும்எடுத்துட்டாங்கன்னா..?””பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வச்சிருக்கேன்…அதிலேர்ந்து எடுத்துப்பேன்..””அதையும் யாரும் பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்கன்னா…?”நான் என்ன முட்டாளா….?அதுக்காகத்தான் பஸ் பாஸ் எடுத்து வச்சிருக்கேன்…”என்றுபெருமையாக சொன்னான் அம்மாஞ்சி.#


*******


கதை : 3ஒரு டாக்சீல ரெண்டு பேர் ஏறினாங்க… அப்படிக்கா போயிக்கிட்டே இருக்கும்போது.. பின்னால உக்காந்திருந்தவங்கல்ல ஒருத்தரு திடீர்னு டிரைவர் தோள தொட்டு “லெப்டுல போப்பா” ன்னு சொல்லியிருக்கார்… அந்த டிரைவர் அலறி அடிச்சிக்கிட்டு வண்டி கண்ட்ரோல விட்டுட்டான்…

நல்ல வேளை.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்த எதிரா வந்த லாரியில கொண்டு போயி வண்டிய மோதியிருப்பான்… வண்டிக்குள்ள எல்லாரும் ஒரு நிமிஷம் சைலண்ட் ஆகிட்டாங்க… அந்த டிரைவர் திரும்பி பார்த்து சொன்னான்…” யப்பா இனி ஒரு தடவை இப்படி செய்யாதே… நான் ரொம்ப பயந்துட்டேன்…”

உடனே பின்னாடி உக்காந்திருந்தவன் சொன்னான் “சாரிப்பா!!.. ஒரே ஒரு தடவை தானே தட்டினேன்… அதுக்கே நீ இப்படி பயந்துக்குவேன்ணு தெரியாது…” அதுக்கு அந்த டிரைவர் சொன்னான் ” உன் பேர்ல தப்பில்லப்பா… நான் இன்னைக்கு தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன்… இதுக்கு முன்னாடி 25 வருஷமா பிணம் எடுத்துட்டு போற வண்டில டிரைவரா வேலை பார்த்தேன்!!!”

Advertisements

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in சில நகைச்சுவை கதைகள். Bookmark the permalink.

1 Response to சில நகைச்சுவை கதைகள் !!!

 1. karuvaayan சொல்கிறார்:

  ´Õ ¦Àñ ´Õ ¦ÁÊì¸ø „¡ôÀ¢üÌ ¦ºýÚ, “þí§¸ ±ìŠðá Ä¡÷ˆ ¸¡ñ¼õ ¸¢¨¼ìÌÁ¡” ±ýÚ §¸ð¼¡û.
  «¾üÌ ¸¨¼ì¸¡ÃÕõ “¬Á¡õ” ±ýÈ¡÷.
  þó¾ ¦Àñ ±Ð×õ §Àº¡Ð «ó¾ ¸¨¼Â¢ý ´Õ ´ÃÁ¡¸ ¦ºýÚ ¿¢ýÚ ¦¸¡ñ¼¡û.
  ¦ÅÌ §¿Ãõ ¸Æ¢òÐ «ó¾ ¦Àñ Å¡í¸¡¾ ¸¡Ã½ò¾¡ø, ¸¨¼ì¸¡Ã÷, “²ÉõÁ¡ ¸¡ñ¼õ Å¡í¸ Å¢ø¨Ä¡”? ±ýÚ §¸ð¼¡÷.
  «ó¾ ¦Àñ§½¡, “¿¡ý Å¡í¸ Å¢ø¨Ä. ¬É¡ø «¨¾ Å¡íÌõ ¬Ç¢ü¸¡¸ ¸¡ò¾¢Õ츢§Èý” ±ýÈ¡û!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s