ஹிரோஷிமாவில் மட்டும் !!!இரண்டாம் உலகப்போரில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளில் ஜப்பானின் மீதான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல் மிகுந்த விவாதத்துக்குள்ளானது. ஆகஸ்ட் 6, 1945-ம் ஆண்டு ஹிரோஷிமாவின் மீதும், ஆகஸ்ட் 9,1945-ம் ஆண்டு நாகசாகியின் மீதும் அமெரிக்கா அணு ஆயுத தாக்குதலை தொடுத்தது மோசமான விளைவின் பிறகு, ஆகஸ்ட் 15, 1945-ல் ஜப்பான் சரணடைந்ததோடு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

>


(குறிப்பு: இந்த பதிவு இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்த நிகழ்வின் பின் உள்ள அரசியலை விமர்ச்சிப்பதற்க்காக அல்ல. இரண்டாம் உலகப்போரை முடிக்கு கொண்டு வந்த வரலாற்று நிகழ்வுகளையும்,அங்கு நிகழ்ந்த அவலங்களையும், அதை சார்ந்த பல திரைப்படங்களில் ஒரு படத்தையும் மட்டுமே அலசுகிறது. அதனால் இந்த பதிவில் நிகழ்வுகளை பறவை கண் பார்வையை கொண்டு பார்க்கும் படியும், சில உணர்வுகளின் உள் சென்று உணரும் படியும் எழுத நினைந்துள்ளேன். தவறு எங்காவதிருந்தால் திருத்துங்களேன்.)

அணு தாக்குதலுக்கும் முன் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் கை ஓங்கியிருந்த போது அது செய்த அட்டகாசமும், அட்டூழியமும் வரலாற்றின் கரைபடிந்த பக்கங்களில் உள்ளது.


1937 மத்தியில் ஜப்பான் சீனாவில் உள்ள மஞ்சூரியாவை கைபற்றிய பிறகு டிசம்பரில் நான்கிங் என்ற இடத்தில் 200,000 முதல் 300000 சீனர்களை காரண காரியமில்லாமல் கொன்று குவித்தது. பெண்களை வன்புணர்வு செய்தனர். போருக்கு பின் சீனர்களை உயிருடன் கொன்று புதைத்த மிகப்பெரிய புதைகுழியை கண்டுபிடித்தார்கள்.

1941 ஜூலையில் ஜப்பான் இந்தோ-சீனாவையும்,கிழக்கு ஆசியாவையும் ஆக்கிரமித்த பிறகு ஜப்பானின் மீது அது வரை போரில் கலந்துக் கொள்ளாத அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது. இதை பொறுக்க முடியாத ஜப்பான் டிசம்பர் 7, 1941, காலை 7:45 மணிக்கு ஜப்பானியர்கள் வாஷிங்டனுடன் உடன்படிக்கை விசயமாக பேசிக் கொண்டிருக்கும் சமயம் அமெரிக்காவின் கப்பற்தளங்களில் ஒன்றான பேர்ல் ஹார்பரை தாக்கியது.

பேர்ல் ஹார்பர் நிகழ்ச்சிக்கு பிறகு அமெரிக்கா பிரிட்டன் உதவியுடன் உக்கிரமாக உலகப்போரில் இறங்கியது. ஜப்பானின் மீது கொண்ட வஞ்சினம் தான் அமெரிக்காவை முழுவதுமாக ஆக்கிரமித்தது. ஜப்பான் மீது பல்முனை தாக்குதல்களை அமெரிக்கா தொடுக்க ஆரம்பித்தது. நீயா? நானா? என்ற போட்டியில் நானே என்று அமெரிக்கா நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

1938-ம் ஆண்டு வாக்கில் ஜெர்மனி விஞ்ஞானிகள் அணுவை பிளந்துவிட்டார்கள் என்ற செய்தி பல நெருக்கடியை கொடுத்தது. ஜெர்மனி முதலில் அணு ஆயுதத்தை தயாரித்து விடுமோ என்ற பயம் எல்லோரையும் தொற்றிக் கொண்டது. ஹிட்லரின் கையில் அணு ஆயுதம் கிடைத்தால் உலகம் மிக மோசமடைந்து விடும் என்ற பயம்.

ஹிட்லரின் யூத வெறி காரணமாக அணுவை பிளந்த விஞ்ஞானிகளுக்கு சரியான இலக்கில்லாமல் போய் விட்டது.ஜெர்மனியில் அணு ஆராய்ச்சி சரியாக போகவில்லை. ஜெர்மனியை விட்டு வந்த யூதனான ஐன்ஸ்டீன் முதலானோர் அமெரிக்காவை வலியூறுத்த அன்றைய அதிபர் ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், ‘மன்காட்டன் ப்ராஜக்ட்’(manhattan project) என்ற ரகசிய அணு ஆய்வு ப்ராஜக்ட் ஒன்றை நிறுவினார்.

ராபர்ட் ஜே ஆப்பன்ஹைமர் தலைமையில் நாட்டில் தலைச்சிறந்த அணுவிஞ்ஞானிகள் ஆராய 200,000 பேர்களை கொண்டு ஒரு ரகசிய அணு ஆயுத வடிவமைப்பு நடந்துக் கொண்டிருந்தது. கடுமையான ஆராய்ச்சியின் பலனாக யூரேனியம்-235, ப்ளுட்டோனியம் போன்ற கனிமங்களை பிளந்து சங்கிலித் தொடர் வினைகளின் மூலம் எண்ணி பார்க்க முடியாத அளவு சக்தி உண்டாக்க முடியுமென நிறுபித்தனர்.1945, ஜூலை 16 ப்ளூட்டோனியம் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘பேஃட் பாய்’ (fat boy) என்ற முதல் அணு ஆயுதம் தயாரிக்கப்பட்டது. சோதனை முயற்சியாக அன்று நியூமெக்ஸிகோவில் ட்ரினிட்டி (Trinity) என்ற பெயரில் வெடிப்பு நிகழ்த்தினார்கள். உயரே கிளம்பிய காளான் புகையும், வெளிச்சமும், வெடி அதிர்வும் பல மைல்களுக்கு அப்பால் இருந்த விஞ்ஞானிகளையும் மூச்சடைக்க வைத்தது. அந்த அளவு சக்தியின் வெளிப்பாடு எங்கேயும் அவர்கள் கண்டதில்லை.


உலகின் முதல் அணு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக முடிந்தது.ஆப்பன்ஹைமர் சோதனை முயற்சி முன்பு வரை எண்ணியிருந்த அணு ஆற்றலுக்கு 10 மடங்கு அதிகமிருப்பதை எண்ணி வியந்து போனார். டிரினிட்டி அணு வெடிப்பின் வீடியோ க்ளிப்பிங்ஸ்க்கு
இங்கே சொடுக்கவும்.

அமெரிக்காவுக்கு ஜப்பானால் நெருக்கடி அதிகமாகி கொண்டே போனது. ஜப்பானை வென்று முழுவதும் ஆக்கிரமிக்கும் வரை இரண்டாம் உலகப்போருக்கு முடிவு வராது என புதியதாக பதவிக்கு வந்திருந்த அதிபர் ட்ரூமென் கணக்கு போட ஆரம்பித்தார். வழக்காமான வழியில் சென்று போரிட்டு வென்றால் 100 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை இழக்க வேண்டிவரும் என்று எண்ணினார்.

அதற்கு ஒரே தீர்வு அணு ஆயுதத்தை ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்துவது. மன்காட்டன் ப்ராஜக்ட்டில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு பயங்கர எதிர்ப்பு இருந்தது. 2 பில்லியன் அந்த காலத்தில் செலவழித்து தயாரிக்கப்பட்ட ஆயுதம் சும்மா தூங்கி கொண்டிருக்க முடியுமா? என்று பல பேரின் ஆதங்கம்.


ஜப்பானுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்காமல் ஜப்பானின் சில முக்கிய நகரமான க்யாட்டோ, ஹிரோஷிமா,யோககாமா,கோகுரா போன்ற நகரங்கள் அணு ஆய்தத்தால் அமெரிக்கா தாக்க பட்டியலிட்டது. கடைசியில் ஹிரோஷிமா தான் முதல் குறி என்று தீர்மானிக்கப்பட்டது. கர்னல் பால் திப்பெட் (Paul tibbets) கமெண்டராக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 6, 1945 என்று நாளும் தீர்மானிக்கப்பட்டது.

திப்பெட் தலைமையில் புறப்படும் குழுவிற்கு அதுவரை அணுகுண்டு என்றால் என்ன? அதன் விளைவு என்ன? என்று தெரியாது. மன்காட்டன் விஞ்ஞானிகள் விளக்கம் கொடுக்க வந்த போது சோதனை அணுகுண்டு வெடிப்பு பற்றிய படத்தை, ப்ரொஜடர் வேலை செய்யாததால் போட்டு காட்ட முடியவில்லை. விஞ்ஞானிகள் விளக்கியதிலிருந்தும், புகைப்படங்களிலிருந்தும் நடக்க போகும் விபரீதத்தை அறிந்து உறைந்து போனார்கள். குண்டு போட்டவுடன் போர் விமானத்தை அதிர்வலை தாக்கும் என்பதால் எப்படி தப்பிப்பது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.

‘இனோல கே’ (ENOLA GAY) என்ற B-29 வகை போர் விமானத்தில் ‘லிட்டில் பாய்’ என்ற யூரேனியம்-235-ல் ஆன அணு ஆயுதம் ரெடியாக ஏற்றப்பட்டது. லிட்டில் பாய் அணு ஆயுதத்தின் மொத்த எடை 4,045KG, சுற்றளவு 0.7 மீட்டர், நீளம் 3.2 மீட்டர், வெடிக்கும் போது 12,000 டன் டி.என்.டியை ஒருங்கு சேர வெடித்தால் உண்டாகும் சக்தி. லிட்டில் பாயின் வெடிப்பை தூண்டும் சர்க்கியூட்டுகள் இன்னும் பொருத்தபடவில்லை. ஹிரோஷிமாவை நெருங்கும் போது பொருத்தப் போவதாக கூறப்பட்டது.இனோலா கே மற்ற இரண்டு உளவு விமானங்களுடன் கிளம்புகிறது. கிளம்பிய 15 நிமிடத்தில் லிட்டில் பாய் என்ற அணுகுண்டில் அசெம்பிளி வேலைகள் நடைபெறுகின்றன. சரியாக மூன்று மணி நேரம் கழித்து இனோலா கே மற்ற இரண்டு விமானங்களுடன் Iwo Jima என்ற இடத்தில் வானில் சந்திக்கின்றன.

காலை 6:15 மணி (ஹிரோஷிமா நேரப்படி) அளவில் ஒரு உளவு விமானம் முன் சென்று வானிலை ஹிரோஷிமாவில் மிகச் சரியாக இருக்கிறது என்று திப்பெட்டிடம் அறிவிக்கிறது. காலை 6:30 மணி அளவில் திப்பெட் தன் குழுவிடன் ‘இதோ ஹிரோஷிமா’ என அறிவிக்கிறார். இன்னும் 1 மணி 45 மணி நிமிடங்கள் இருக்கும் நிலையில் குழு அணுகுண்டின் சர்க்கியூட்டுகளை உயிருட்டும் பணி நடக்கிறது. ஹிரோஷிமாவை நெருங்கும் நேரத்தில் விமானத்தின் உயரத்தை சரியான அளவிற்கு கொண்டு வருகிறார்கள்.

வானம் தெளிவாக இருந்தததால் ஹிரோஷிமாவின் நடுவில் உள்ள T வடிவில் உள்ள அயோய் பாலத்திற்கு குறி வைக்கிறார்கள்.சரியாக ஹிரோஷிமா நேரப்படி காலை 8:15-க்கு மணிக்கு கவுண்ட் டவுண் ஆக அணுகுண்டு விமானத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது. 18000 அடி உயரத்தில் அணுகுண்டு தன்னால் எரியூட்டப்படுகிறது. விமானம் திரும்பி கண்மண் தெரியாத வேகத்தில் வந்த வழியில் விரைகிறது. 43 நொடிகளில் ஒளி விமானத்தை நிரப்புகிறது. பர்ப்பிள், சிகப்பு கலவையினூடே கருப்பு கலரில் காளான் வடிவில் அடர்த்தியான புகை ஹிரோஷிமா நகரையே மறைக்கிறது. ஒரே நிமிடத்தில் 20000 அடி உயரத்தை அடைந்த காளான் புகை கொஞ்ச நேரத்தில் 30000 அடிக்கு உயர்கிறது. திப்பெட் விமானத்தில் அறிவிக்கிறார் “வரலாற்று சிறப்புமிக்க முதல் அணுகுண்டை வெடித்து விட்டோம்”.

கீழே ஹிரோஷிமாவில் 12000 கிலோடன் டி.என்.டி ஒரு சேர எல்லோர் தலையிலும் வெடிக்கிறது. கண்ணை கூசும் வெளிச்சம். அதை தொடர்ந்து சூரியனை மறைத்த கறுப்பு. எங்கும் இருட்டு. வெடித்த பகுதியை சுற்றி வெப்பநிலை 7000 பாரன்ஹீட்டுக்கு உயருகிறது, மணிக்கு 980 மைல் வேகத்தில் வெடி அழுத்தம் 1 மைலுக்குள் இருக்கும் எல்லோரையும் சம்பலாக சிதறடிக்கிறது. அணு வெடிப்பு ஆல்பா,பீட்டா,காமா, நியூட்ரான் கதிரியக்கங்களை வெளியிடுகிறது.2 மைல்களுக்குள் இருப்பவர்கள் அனைவரும் சாம்பல் ஆகிறார்கள். 2 மைல்களுக்கு அப்பால் இருப்பவர்களின் கட்டிடம் சிதைந்து, தீ மூடிய உடலின் பாகங்களை தவிர மற்ற எல்லா பாகங்களையும் சுட்டு பொசுக்கிறது. தீ காயத்தில் தப்பியவர்களை கதிரியக்கம் உடனே கொல்கிறது. எங்குமே மரண ஓலம். வெப்பத்தை கண்டு ஊரின் நடுவில் ஓடும் ஆற்றில் குதிக்கிறார்கள்.

ஆறு முழுவதும் தீக்கனலாக எரிகிறது. உடம்பில் போட்டிருந்த துணி தான் தொங்குகிறது என்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. உடம்பில் தோல் பாலம் பாலமாக உரிந்து தொங்குகிறது. பாதிப்படைந்தவர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் அடையாளம்அணுகுண்டு வெடித்த 3 மணி நேரம் கழித்து மொத்தமே 6 போட்டோகளே எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு போட்டோகிராபர் விளக்குகிறார்.

“…ஹிரோஷிமா நகரெங்கும் தீப்பிடித்து எரிகிறது. நகரின் பக்கத்தில் உள்ள டெய்சி பள்ளியிலிருந்து குழந்தைகள் தீக்காயங்களுடனும்,மற்ற பாதிப்புகளுடனும் வெளியே வருகிறார்கள். என்னுடைய கேமிரா வழியாக பார்க்கிறேன். குழந்தைகள், பெற்றோர்கள், ஆடவர்கள் யாவரும் ‘என் உடம்பு எரிகிறது என் உடம்பு எரிகிறது’ என கதறுகிறார்கள். நிறைய பேர் தண்ணீர் வேண்டும் தண்ணீர் வேண்டும் என இலக்கின்றி அலறுகின்றனர். எத்தனை கொடூரமான குணம் எனக்கு, இந்த கொடிய வேளையில் புகைப்படம் எடுக்கிறேனே என என் மனசாட்சி பிடுங்கி தின்கிறது. அது என் தொழில் என்று சமாதானம் அடைகிறேன். எப்படியோ திரணின்றி சட்டரை அமுக்கி முதல் படத்தை எடுத்தேன்.

அடுத்து கேமிராவை திருப்பிய போது தீக்காயத்தால் அலறி துடித்து கொண்டிருக்கும் குழந்தை அரைநிலையில் எரிந்த பிணத்தின் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறது. அது அந்த குழந்தையின் தாயார் தான். என்னால் கேமிராவின் வீவ் ஃபைண்டரின் வழியாக பார்க்க முடியவில்லை. கண்ணில் கண்ணீர் முட்டி வீயூவ் ஃபைண்டரை மறைக்கிறது”

இனோலா கே வெற்றிகரமாக அமெரிக்காவில் நுழைய உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. சரியாக 16 மணி நேரம் கழித்து அமெரிக்காவின் அதிபர் ட்ரூமென் அறிக்கையை வாசிக்கிறார். உலகின் முதல் அணு ஆயுதத்தை அமெரிக்கா தான் தயாரித்தது. போரை முடிவுக்கு கொண்டு வரும் என்ற நினைப்பின் ஜப்பானின் மேல் பயன்படுத்தப்பட்டது என்கிறார்.

ஹிரோஷிமாவில் மட்டும்

இறப்பு/காணாமல் போனவர்கள்: 70000 – 80000காயம் பட்டவர்கள்:

70000மக்கள் தொகை : 35,000 per sq mileமொத்தகேஸூவாலிட்டி ; 140,000 – 150000சிதிலமடைந்த பரப்பு : 4.7 Sq mileஇதில் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த புற்று நோய், வயிற்றுபோக்கு, முடிஉதிர்தல் என்று அடுத்தடுத்த வருடங்கள் இறந்தவர்கள் நிறைய பேர். தப்பித்தவர்களுக்கு கதிரியக்கத்தால் பிறந்தவர்கள் ஊனமான குழந்தைகளே.

திரும்ப 3 நாள் கழித்து, நாகசாகியில் அமெரிக்கா இதை விட வலிமை வாய்ந்த அணுகுண்டை போடுகிறது. அங்கும் பாதிப்பு அதிகம் என்றாலும், மலைகள் சூழ்ந்து இருந்ததால் உயிர் இழப்பு ஹிரோஷிமாவை விட குறைவு. இத்துடன் ஜப்பான் சரணைடைகிறது.

ஹிரோஷிமாவில் உயிர் பிழைத்தவர்களின் மனப்பதிவுகளை படித்துக் கொண்டிருந்தேன். ஒரு சில பதிவுகளுக்கு பிறகு எனக்கு அதற்கு மேல் தொடர தைரியமில்லை. எடுத்துக்காட்டாக…சின் ஷி 3 வயது பையன். அவனுக்கு 3 சக்கர வண்டி என்றால் உயிர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட சமயத்தில் கிமிக்கோ என்ற நண்பனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அதில் இருவரும் உயிர் இழந்தார்கள். உயிர் பிழைத்த பெற்றோர்கள் இறந்த குழந்தைகளை தோட்டத்திலே புதைத்தார்கள்.

40 வருடங்கள் கழித்து குழந்தைகளை நல்ல கல்லறையில் புதைக்க அவனது பெற்றோர்கள் புதைந்த இடத்தை தோண்ட ஆரம்பிக்கிறார்கள். பக்கவாட்டில் முதலில் துருபிடித்த பைப் வருகிறது. இழுத்துப்பார்த்ததில் அது சின் ஷின் ட்ரை சைக்கிள். அவனது தாய் மெல்ல விசும்ப தொடங்குகிறாள்.

இன்னும் தோண்டும் போது வெள்ளையாக ஏதோ தெரிகிறது. சாப் ஸ்டிக்கை வைத்து மெதுவாக மண்ணை விளக்கி பார்த்தால் சிறிய சிறிய எலும்புகள். சின் ஷியின் எழும்புகள். 40 வருடமாக பெற்றோர்கள் மனதில் புதைந்திருந்த சின் ஷி கண்ணீராக வெடித்து வெளியேறுகிறான்.

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in ஹிரோஷிமா. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s