கொலையாளி யார்? ????

கொலையாளியைக் கண்டுபிடியுங்கள்…


அந்த Chemistry LAB வழக்கத்தை விட மிக அமைதியாய் இருந்தது. நீண்ட நடைபாதை.இருபுறமும் க்ராணைட் கல்லை செதுக்கி பாலிஷ் போட்டு நேர்த்தியாக அமைக்கப் பட்ட மேஜைகள்.ஒவ்வொரு மேஜையிலும் ஏகப்பட்ட அமிலங்கள்,உப்பு பொட்டலங்கள்.பியூரெட்டுகளும் பிப்பெட்டுகளும் நீட்டிக்கொண்டு இருந்தன. சில மேஜைகளில் ஒழுங்காக அடுக்கி வைக்கபட்டு இருந்தன.

பெரிய கரும்பலகையில் KMNO4,H2O,N2 பென்சாயிக் ஆசிட் என ஏதேதோ கிறுக்கல்கள்.குளோரோஃபார்மை CHCL3 என்று லேபிளில் எழுதப்பட்ட சிறிய குடுவை.அருகில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை KMNO4 என்று லேபிளில் எழுதி லேபின் மூலையில் குடுவையில் வைத்திருந்தார்கள்.N2O,NH3 என நைட்ரஜன்,நைட்ரஸ் போன்ற எல்லா அமிலங்களும் உப்புகளும் கலந்த சற்று காரமான நெடி.

ஓரத்தில் போடப்பட்ட பெஞ்சுகளிலும் சிலபல குடுவைகள். எல்லாவற்றையும் தாண்டி வந்து இதோ, டெஸிகேட்டர் போன்ற பாதுகாப்பான உபகரணங்கள் வைக்கபடும் இந்த மூலையில்… AC Sir என்று அழைக்கப்படும்(இனி மேல் அழைக்கப்படும் கிடையாது)A.கிரிஸ்டோஃபர்,HOD, கண்கள் நிலைகுத்தி கழுத்துப் பகுதி வழியாக கிட்டத்தட்ட உடலின் மொத்த ரத்தத்தையும் வழிய விட்டு கபால மோட்சம் அடைந்திருந்தார்.ஆம், மண்டையும் கூரான ஆயுதம் கொண்டு பிளக்கப்பட்டிருந்தது.
மூர்த்தி,லேபை சுத்தம் செய்பவன்,அலறிய சத்தம் கேட்டு கல்லூரியே அங்கே திரண்டுவிட்டது. பிரின்ஸி ராதாகிருஷ்ணன் முகத்தில் அப்பியிருந்த ஃபேர் & லவ்லியின் வாசனையோடு வியர்வை சுரந்தது. கைக்குட்டையைக் கொண்டு ஒற்றிக்கொண்டே விரலழுத்தல்களில் போலீஸை வரவழைத்தார்.
அது நகரின் பிரதானத்தில் இருக்கும் பிரமாதமான பெயர்பெற்ற கல்லூரிகளில் ஒன்று.அங்கு சேர்வதற்கு நன்கொடைகள் எவ்வளவு வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கும் பெற்றோர்களால்,கல்வி வளர்கிறதோ இல்லியோ அந்தக் கல்லூரியும் சில சிப்பந்திகளும் வாழ்வாங்கு வாழும் கல்லூரி.
அதில் சற்று நேர்மையான மனிதர்களில் ஒருவர்தான் ரத்தம் ஒழுக உயிர் துறந்திருக்கும் கிரிஸ்டோபர் ஸார். மிக கண்டிப்பானவர். அவருக்கு நெருக்கமானவராக யாரையும் குறிப்பிடவே முடியாதவண்ணம் அனைவரிடமும் கடுமை,நேர்மை என வாழ்ந்தவர்.அதனாலேயே மறைந்துவிட்டாரோ என்று மாணவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் இன்ஸ்பெக்ட்டர் அரசு.ஒரு இன்ஸ்பெக்ட்டர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தார்.இரண்டு விசயங்கள் அவரிடம் வேறுபட்டது. ஒன்று தொப்பை..அது இல்லை..மற்றொன்று நேர்மை..அது இருந்தது.

எத்தனையோ சம்வபங்களை பார்த்ததன் விளைவாக அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நேரே ஸ்பாட்டிற்கு வந்த அரசுவுடன் வந்திருந்த மற்ற டிப்பார்ட்மெண்ட் ஆட்கள் உடலை விதவிதமான கோணங்களில் க்ளிக்கித் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.பவுடர்களைத் தூவி கைரேகை அகப்படுகிறதா என அங்குலம் அங்குலமா ஒரு குழுவினர் தேடிக்கொண்டிருந்தார்கள்.
அரசு தன் ஆறடியில் நான்கடியை மடக்கிக்கொண்டு கிறிஸ்டோபரின் அருகில் அமர்ந்தார்.ஆள் நல்ல அனுபவஸ்தர் என்பதை வெண்கேசத்தில் தெரிந்துகொள்ளமுடிந்தது.தீர்க்கமான நாசி,கருவளையக் கண்கள்,கண்ணாடி சற்று தூரம் தள்ளி சிதறிக் கிடந்தது.மீசையற்ற முகம்.கழுத்திற்கு கீழே எல்லாம் ரத்த மயம்.சிலுவை டாலரிலும் ஏசு ரத்தம் சுமந்தார்.கிறிஸ்டோஃபரின் ரத்தம்.

கோணலாய் கிடந்த கிறிஸ்டோஃபர் கடைசி நேரத்தில் அவசரமாய் எதையோ எழுதமுற்பட்டு முடியாமல் போய் ஏதோ ஒரு அமிலக்குடுவையை தொட்டுக்கொண்டிருந்தார்.சாகும் போதும் வேலையின் மேல் விசுவாசமோ என்று நினைத்துக்கொண்ட இன்ஸ்பெக்டர் அரசு பிரின்ஸ்பாலை நோக்கை திரும்பினார்.


“பிரின்ஸ்பால் ஸார்..கொஞ்சநாளாவே உங்க காலேஜ்ல நடக்குற நன்கொடை பஞ்சாயத்து எல்லாம் கேள்விப்பட்டுத் தான் இருந்தேன்.இப்ப என்ன சொல்லப்போறீங்க..”

“ஸார்.. நீங்க நினைக்கிற மாதிரி..”
“வேண்டாம் ஸார்.. நன்கொடையே வாங்குறதில்லைன்னு சொல்லப்போறீங்களா..விட்டுடங்க..let us come to the point..யார் மேலயாவது சந்தேகம்?”

“இல்ல ஸார்..அவர் ரொம்ப நல்ல மனுசன். ரொம்ப நேர்மையானவர்.”

“அதனாலதான சாவு.. விடுங்க..அவர் டிப்பார்மெண்ட் ஆட்கள் யார் யார்?”

ஏழு பேரை அறிமுகப்படுத்தினார்.
Prof.சோமசுந்தரம்,லெக்சரர்கள் யூசுஃப்,தேவி,கல்யாண்,லேப் அஸிட்டெண்ட் ரவிக்குமார்,மனோகரன்,பியூன் மூர்த்தி.

மூர்த்தி தான் முதலில் பார்த்தான் என்பதால் அவனிடம் ஆரம்பித்தார்.“எதுக்குய்யா கொன்ன உங்க ஸார?”

“ஸார்..”

என்ன ஸார்..சும்மா சொல்லு”

“எங்க அம்மாறிய எனக்கு ஒன்னும் தெரியாது ஸார்”

“இந்த அம்மா மேல சத்தியம் ஆட்டுக்குட்டி மேல சத்தியம்னுலாம் சொன்னேன்னா பேத்துருவேன்..சொல்லுடா என்ன பார்த்த?”


எப்பவும் காலைல வந்து லேப சுத்தம் பண்ணுவேன் ஸார்.அதேமாதிரி இன்னுக்கும் சுத்தம் பண்ணிட்டே வந்து பார்த்தா ஸார் இப்பிடி கிடக்காரு ஸார்..”


அடுத்து யூசுஃப் கேட்கும் முன்பே பதறினார்.உதறினார்.தேவியும் அதுபோலவே..ஆனால் இருவரும் நிறைய அழுதார்கள்.

சோமசுந்தரம் மிடுக்காக இருந்தார்.

“அடுத்த HOD யா நீங்க தானே ஸார் வரணும்?”

“ஆமா ஸார் என்றவர் பின் கேள்வியின் அர்த்தம் புரிந்து சற்று கலவரமாக,ஸார் வாட் யூ மீன்”“ஐ மெண்ட் நத்திங்” என சிரித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர் அட்டெண்ர்கள் பக்கம் திரும்பினார்..
என்னப்பா..உங்களுக்கு ஏதாவது தெரியுமா..நீங்களும் நல்லவங்களா?”
பிரின்ஸ்பால் இடைமறித்தார்..

“ஸார்.. ஸ்டாஃப் எல்லாமே இங்க ரொம்ப வேண்டப்பட்டவங்க ஸார்.ரவிக்குமார் இங்க ஏற்கனவே வேல பார்த்த ஸ்ரீனிவாசன் ஸாரோட பையன். மனோகரனும் இங்கே இதுக்கு முன்னாடி அட்டெண்டரா இருந்த கேசவனோட பையன்.எல்லாருமே ரொம்ப நல்லவங்க,கல்யாண் தான் தேவி மேடத்த கல்யாணம் பண்ணப்போறாரு.கிறிஸ்டோஃபர் ஸார் தலமைல தான் அடுத்த மாசம் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருந்தது.ப்ச்”.
“எல்லோருமே நல்லவங்கன்னா நாங்க எதுக்கு?”
என்று சொன்னவர் மற்ற அதிகாரிகளை அழைத்து எல்லா ரிப்போர்ட்டையும் விரைவாக தருமாறு கேட்டவர்,


கிறிஸ்டோஃபரின் கையில் கடைசியாக இருந்த குடுவையை கைக்குட்டை உதவியோடு எடுத்து சோமசுந்தரத்திடம் நீட்டிக்கேட்டார்..
“இது ஏதாவது ஆசிட்டா ஸார்?”


இது பொட்டாசியம் பெர்மாங்கனேட்..இத எதுக்கு எடுத்தாருன்னு தெரியல..?”


“இது ஆசிட் வகையா? தற்காப்புக்கு பயன்படுத்தலாமா?”


“இல்ல ஸார்.. இது சும்மா சாதாரண உப்புக் கரைசல் ஸார்..சும்மா பயமுறுத்த யூஸ்பண்ணி இருக்கலாம்..”


“தேங்க்க்யூ ஸார்”
ஏழு பேரையும் கூடவே பிரின்ஸிபாலையும் சேர்த்தே சந்தேகப்பட்டுக்கொண்டே ஜீப்பில் ஏறினார் அரசு.. மண்டை குடைந்தது.


சோமசுந்தரம் அடுத்து டிப்பார்ட்மெண்ட் ஹெட் ஆவதற்கு பண்ணி இருப்பாரோ? அல்லது அந்த தேவியிடம் ஏதாவது வில்லங்கம் செய்து,கல்யாண் ஏதாவது?அல்லது மூர்த்தி,மனோகரன் இருவருமே ஏற்கனவே வேலைபார்த்தவர்களான கேசவன், சுந்தரம் அவர்களின் மகன்.. சாகும் போதும் கையில் பாட்டில்..அதை வைத்து தாக்க முயற்சி செய்தாரா.. இல்லை ஏதாவது.. ஏதாவது..?


வழியில் ஜீப்பை நிறுத்து ஒரு கிங்ஸை ஊதியவரின் கண்களில் ஒரு மின்னல் வெட்டியது. கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்டார்..இனி போலீஸ் ட்ரீட்மெண்ட்டில் உண்மை வெளிவந்துவிடும்..
கொலையாளி யார்?

இந்த முறை கொஞ்சம் கடினம் அல்லது இது செல்லாது என்று சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்.ஏனெனில் குறிப்பு சற்று கடினமானதாகவே படுகிறது. இருந்தாலும் வலையுலக வாசகர்கள் என்றால் சும்மாவா? கண்டுபிடியுங்கள்..கண்டுபிடித்துவிடுவீர்கள்..


கதையை இருமுறை படித்தால் நிச்சயம் விடை உள்ளே தான் இருக்கு…
உங்களது சரியான பதில்களை கருத்து ( Post Commence ) பகுதியில் பதிவு செய்யவும் . பதில்  அளிப்பவர்கள் மறக்காமல் உங்களது முகவரியாயும் குறிப்படாவும் . உங்களுக்கு ஒரு சிறந்த பரிசு உங்களது இல்லம் தேடி வரும்……………………….


About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s