விடை தெரியா கேள்விகள் !!!

மனிதன் சிந்திக்க தெரிந்த ,பகுத்தறியும் அறிவுகொண்ட உயரிய படைப்பு. நாம் அறிந்த வரையில் மனிதனை காட்டிலும் உயரிய ஒரு உயிர் படைப்பு இந்த நில உலகிலும் பிரபஞ்சத்தில் வேறெங்கிலும் நாம் அறிந்ததில்லை.உலகினை படிப்படியாக தனது அறிவால் சிந்தித்து வடிவமைத்து மனித மூளை.

பல நூற்றாண்டுகளாக இந்த உலகில் பல அறிவியல் ,மனவியல் அற்புதங்களை மனிதன் தனது அறிவால் படைத்து வருகிறான் .பல லட்சகணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நிலவுக்கும்,செவ்வாய்க்கும் இந்த பூமியில் இருந்தபடி பல ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து காட்டிய மனித பராக்கிரமம் வியக்கக்கூடிய ஒன்று.

இருப்பினும் மனித அறிவுக்கும் ,திறனுக்கும் அப்பாற்பட்டு இந்த பூமியில் பல விடை தெரியாத கேள்விகள் மனிதனை சுற்றி வந்தவண்ணம் இருந்து கொண்டிருக்கிறது .மனித அறிவு அழுத்தமான விளக்கங்களை விடைகளாக விளக்க திறனற்றதாக இருக்கின்ற அந்த விடைதெரியாத கேள்விகளே மனிதனுக்கு முன் வைக்கப்பட்டுள்ள சவால் எனலாம்.!

மனித மூளையின் முதல் தோல்வியும் மனித அறிவையும் மீறி ஏதோ ஓர் சக்தி ஆட்டி வைக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது எனபதற்கு மனித வாழ்வின் மரணம்” விடை தெரியாத பல கேள்விகளில் முதல் கேள்வி எனலாம்.

மனிதனால் ஏன் மரணத்தை தடுக்க இயலுவதில்லை ? முதுமை,நோய் ,விபத்து என பல காரணிகளால் மனிதன் முடிவை நோக்கி செல்லும்போது அதனை முற்றிலுமாக தடுக்க இயலாமல் மனிதன் தனது சிந்தனை,அறிவு என எல்லா உயரிய தன்மைகளின் எல்லை கோட்டில் நிற்கின்றான்.

மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது மனித மூளையின் எல்லை முடிந்து அதற்குமேல் என்ன என்பது மனிதன் அறிதிராத ஒரு நிதர்சனம் எனலாம்.பல மருத்துவர்கள் எங்களால் முயன்றவரை நாங்கள் முயன்றாகிவிட்டது இனி இந்த உயிரை காப்பட்ட்ற வல்லவன் இறைவன் மட்டுமே என்று கூறும் போது மற்றொரு கேள்வி முளைக்கிறது…யார் அந்த இறைவன் ? அவன் எங்குள்ளான் ? இந்த கேள்விகளுக்கு விடை தேடி புறப்பட்டவர்களை இந்த உலகம் கொண்டாடி மகிழ்கிறது. எனினும் முற்றிலும் உறுதியான விடையை இந்த உலகம் இன்று வரை பெறவில்லை !!

பிரம்மனை uஇரகளை படைக்கும் கடவுளாக இந்து புராணங்கள் கூறுகின்றன நவின அறிவியலில் மனிதன் கண்ணாடி குழாய்களில் மனித உயிரினை படைக்க வல்ல பிரம்மனாக இருப்பதை நாம் காண்கிறோம்.

ஆனால் மரணம் என்று வரும் போது அந்த மனித பிரமனும் சவபெட்டிக்குள் ஆணியிட்டு அடைக்கப்பட்டு மண்ணுக்குள் புதைக்கபடுகிறான் .எங்கே சென்றது அவனுடைய பராகிரமம் ?
நாகரிகத்தில் முன்னோடி என்று பறை சாற்றி கொள்ளும் மனித இனத்தில் பலவித அலங்கோலங்களும்,அருவருப்புகளும் விடை இன்றி இன்னும் இருக்கிறது எனலாம் .பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வந்த பின்னும் இன்னும் மனிதன் ஏன்

ஆடு,மாடு,கோழி,பாம்பு,பல்லி,பன்னி,எலி,தவளை,குரங்கு,கடல் வாழ் , இன்னும் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் கொன்று மனிதன் தனது வயிற்றுக்குள் தள்ளுவது எந்த வகை நாகரிகம் ??
பூமியின் ஒரு பகுதி வறுமையாலும்…மற்றொரு பகுதி செழிப்பாகவும் இருக்க காரணம் என்ன ?

வாழ்க்கையில் விதி என்றும் ..இறைவனின் விருப்பம் என்றும் மனிதனை ஏற்று கொள்ள செய்வது எது?
மரணத்தின் முன்னாள் மண்டியிட்டு நிற்க செய்வது எது ?
கனவு போல் கழிந்து செல்லும் செல்லும் வாழ்கை உண்மைதான?

இன்னும் பல கேள்விகள் மகா அறிவு பொருந்திய மனிதனால் விடை காண முடியாததாக உள்ளது விந்தை.ஏனெனில் மனிதன் பிற கோள்களில் தன்னை போல் ஏதேனும் இனம் இருக்கிறதா என விட தேடி செல்லும் தருணத்தில் இந்த எளிய கேள்விகளுக்கு விடை தெரியாமல் பல நூற்றாண்டுகளை கடத்தி வருவது ஏன் என விளங்கி கொள்ள இயலவில்லை

உங்களில் யாருக்கேனும் இதற்கான விடைகள் தெரிந்தால் பாவம் இந்த மனித பதர்களுக்கு உதவுங்களேன் !!


About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in விடை தெரியா கேள்விகள். Bookmark the permalink.

1 Response to விடை தெரியா கேள்விகள் !!!

  1. Abdul சொல்கிறார்:

    இஸ்லாம் கூறும் இறை கோட்பாடை சற்று தூய்மை வடிவில் கிடைக்கப்பெற்று ஆராய்வீர்களானால் 100 சதவீதம் இந்த பதிவிற்க்கான விடையை பெருவீர்கள் என்பதில் அனுஅளவிலும் சந்தேகம் வேண்டாம்.உதவிக்கு alquran54.17@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s