குட்பை !!!

ஒருவரிடமிருந்து விடைபெறும்போது ‘ வரேன் ‘ என்று சொல்லிவிட்டுப் போகும் பழக்கம் நம் ஊரில் உண்டு . ஆங்கிலேயர்கள் ‘ குட்பை ‘ சொல்கிறார்கள் . ‘ God be with you ‘ என்பதன் சுருக்கம் அது . பிரெஞ்சுக்காரர்கள் ஆட்யூ ( Adieu ) அல்லது au revoir என்பார்கள் . கிரேக்கர்கள் ‘ ஆடியோலிஸ் ‘ என்கிறார்கள் . எல்லாமே கடவுளைக் குறிக்கும் . ஜெர்மனியில் யூஃப்வைடர்ஸெஷன் என்பார்கள் . ரஷ்யாவில் — டோஸ்வைடேனியா . சைனீஸ் — லாய் சீயன் . சோனியா காந்தி இத்தாலியிலிருந்து இந்தியா வருமுன் பெற்றோரியம் ‘ அரைவெடொஸி ‘ என்று சொல்லியிருப்பார் . (‘ மறுபடியும் நாம் சந்திக்கும் வரை ‘ என்று அர்த்தம் ) . ஹவாய் தீவில் ‘ அலோஹா ‘ — ‘Love ‘ என்று பொருள் .!


பிலிப்பைன்ஸில் ஒரு நண்பரிடம் நான் விடைபெற்றபோது , ‘ ஸலாமத் ஜலான் ‘ என்றேன் . ‘ அமைதி உண்டாகட்டும் ‘ ‘ விடைபெறுகிறேன் ‘ என்னும் அர்த்தத்தில் ! ஜப்பானில் உலகப் புகழ்பெற்ற அழகிய வார்த்தை — ஸயனோரோ ! அதாவது , ‘ என்ன செய்வது …? நாம் தற்போதைக்கு பிரிந்தாக வேண்டும் ‘ என்கிற அளவுக்கு அர்த்தமுள்ள வார்த்தை அது ! துருக்கிய ‘ வரேன் ‘ தான் எனக்குப் பிடித்தது —


‘ கலீ…கலீ…’! அதற்கு ‘ சிரித்துக்கொண்டே… சிரித்துக்கொண்டே…’ என்று பொருள் .

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s