அவள் நினைவுகளுடன் சில உளரல்கள் !!!

அடி பெண்ணே !


நீ உன் இமை கதவுகளை
ஒருமுறை மூடித் திறக்கும்
அந்த ஒரு சில நொடிகளில்
நான் என்முகத்தை ஓராயிரமுறை
துடைத்துக் கொள்கிறேன் .,


வள்ளுவன் உன் இதழ்களை
பார்த்தபின்புதான் திருக்குறளை
இரண்டு வரியில் எழுத தொடங்கினானோ ?
என்ற தீராத கேள்விக் கனைகளும்
அவ்வப்பொழுது என்னை
தீண்டி பார்க்கத்தான் செய்கின்றன .


நீ ஒவ்வொரு முறை
என்னை கடந்து செல்லும்பொழுதும்
உன் இதழ்கள் ஊமையாகி போனாலும் ,
உந்தன் பார்வைகள்
சத்தம் போட்டு என்னை நலம்
விசாரித்து விட்டுத்தான் செல்கின்றன .

நீ உன் தோழிகளுடன் பேசும்பொழுது
உன் ஈர இதழ்களில் இருந்து
தெறிக்கும் எச்சில் துளிகள் கூட
எனக்கு பன்னீர் துளிகள்
தெளிக்கப் பாடுவதாகத்தான் உணர்கிறேன் .

நீ என்னுடன் அளந்து பேசும்
அந்த ஒரு சில வார்த்தைகள் கூட
உன்னிடம் அடம் பிடித்துதான்
என்னிடம் வந்து சேர்கின்றன .


நான் உன்னை நேசிப்பதை
மறந்து விடுவேனோ என்ற
கவலை உனக்கு வேண்டாம் .
நான் நேசித்தால்தானே
உன்னை மறப்பாதற்கு .,
உன்னை சுவாசித்துக்கொண்டு
அல்லவா இருக்கிறேன் .,

நான் உண்மையில் மேடை
பேச்சாளன்தான் ஆனால்
நீ அரிதாய் எப்பொழுதாவது உதிர்க்கும்
வார்த்தைகளை கேட்ட மறு நொடியே
ஊமை பேச்சாளனாகிறேன்., ஏன் என்ற
வினாவிற்கு இன்னும் விடை
தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் உன் விழிகளில் .

இப்படி உறக்கத்தில் கூட உளறுக்கின்றேன் .,
உலகத்தில் இதுவரை யாரும்
அறியாத வார்த்தைகள் , புரியாத மொழிகளில்
அழியாத உன் நினைவுகளால் !!!!!!!!!!!

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in ஈரம், கனவுகள், கவிதைகள், கிறுக்கல்கள், சங்கரின் கிறுக்கல், முத்தம். Bookmark the permalink.

3 Responses to அவள் நினைவுகளுடன் சில உளரல்கள் !!!

  1. //வள்ளுவன் உன் இதழ்களை பார்த்தபின்புதான் திருக்குறளைஇரண்டு வரியில் எழுத தொடங்கினானோ ?என்ற தீராத கேள்விக் கனைகளும் அவ்வப்பொழுது என்னைதீண்டி பார்க்கத்தான் செய்கின்றன .//அட பாட்டி ……அவ்வளவு வயசானவகளா உங்க கவிதை காதலி …

  2. iman raja சொல்கிறார்:

    very very nice…………….

  3. Dinesh Kannan.C சொல்கிறார்:

    Really feel pani mattumae intha mathiri kavithaigalai elatha mudiyum

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s