ஒரு ஞானியின் சிந்தனை !!!


உலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மனிதன் மட்டுமே. அப்படி சிந்திக்கக் கூடிய மனித உணர்ச்சிகளில் ஒவ்வொரு மனதும் ஒரு மாதிரி. இதை கவியரசு கண்ணதாசன் தனது பாடலில் “சிந்திக்க தெரிந்த மனமே…” என்றும் சுகி சிவம் “மனசே மந்திரச் சாவி…” என்றும் கூறியுள்ளனர்.

அந்த மனித மனத்தின் சிந்தனை… ஓர் அழகான ரோஜா செடி. அதில் உள்ள பல முள்களுக்கு இடையில் ஒரு அழகான ரோஜா பூ. அதை பறிக்க நினைத்த அந்த மனிதர் கையில் ரோஜா செடியின் முள் குத்தியது. இப்பொழுது அந்த மனிதனின் சிந்தனை… “அழகான ரோஜா பூ செடியில் முள்ளை வைத்த கடவுள் முட்டாள்” என்கிறது.

ஒரு ஞானியின் சிந்தனை. அதே ரோஜா பூ செடியின் மீது, “ஆஹா… கடவுள் கருணையே கருணை! இந்த ரோஜாப்பு செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா? நீர் விடுவார்களா?”. இந்த முட்செடியின் நடுவில் இடை இடையே ரோஜாவைச் சிரிக்க விட்டு இந்த செடிக்கும் மரியாதை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி.

சற்றே யோசியுங்கள். இங்கு செடி ஒன்றே. அதன் மீது மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனைகளே வேறுபடுகிறது. நாம் நல்லவற்றையே சிந்திப்போம் நாளும் வளம் பெற.

“உண்மை அறிதல், தன்னை அறிதல்”

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in உன்னை அறிந்தால், என்றும் ஒரு தகவல். Bookmark the permalink.

5 Responses to ஒரு ஞானியின் சிந்தனை !!!

 1. தயாநிதி சொல்கிறார்:

  அருமை நண்பரே …!!!!! மனிதனின் சிந்தனை மாறுபட்டது என்பது ஒரு சின்ன உதாரணத்தோடு சொல்லியிருப்பது மிக்க அருமை !! உங்க சிந்தனை மேலும் வளர வாழ்த்துகள் !!!

 2. சிந்திக்க வைத்தீர்கள் நண்பரே வாழ்த்துகள் ஹுசைன் UAE

 3. சுதன் சொல்கிறார்:

  உங்கள் தொடர் மேலும் தொடர என் வாழ்த்துக்கள் நண்பரே
  அருமையாக உள்ளது

 4. JAGADEESAN சொல்கிறார்:

  i like u r think ( because deference think )

 5. priya சொல்கிறார்:

  it’s not a dialogue.if everyone think it we should not use the word human rights.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s