வின்ஸ்டன் சர்ச்சிலும் வியந்த அந்த விருந்து !!!

போர்வீரன், இராணுவ முகாம்களில் பத்திரிக்கைகளுக்காகச் செய்திகள் சேகரிப்பவன், பாராளுமன்ற உறுப்பினர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர் ஓவியர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் என படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்.இங்கிலாந்தில் உள்ள பிரௌன் ஹீம் அரண்மனையில் 1874-ஆம் ஆண்டு நவம்பர் 30 – ம் நாள் சர்ச்சில் பிறந்தார்.
 இவரது இயற்பெயர் ‘சர் வின்ஸ்டன் லியோனர்டு ஸ்பென்ஸர் சர்ச்சில்’ என்பதாகும்.
இங்கிலாந்தில் உள்ள பிரௌன் ஹீம் அரண்மனையில் 1874-ஆம் ஆண்டு நவம்பர் 30 – ம் நாள் சர்ச்சில் பிறந்தார்.
சர்ச்சிலின் தந்தை இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பனராக இருந்தார். இந்த இருந்த அதே பாராளுமன்றத்தில் அவருக்குப் பின் மகனும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.
அதன் பின் இங்கிலாந்து தேசத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமராகவும் சர்ச்சில் பொறுப்பேற்று, உலகத் தலைவர்களில் ஒருவராகவும், உலக மேதைகளில் ஒருவராகவும் புகழ் பெற்றார்.
ஒரு சமயம் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் , நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஒரு விருந்திற்கு சென்றனர் . விருந்து பரிமாறப்பட்டது . ராதாகிருஷ்ணன் கையை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொண்டு வந்தார் . சர்ச்சில் ஸ்பூனை வைத்துக்க்கொண்டு சாப்பிட ஆரம்பிக்க , ராதாகிருஷ்ணன் கைகளால் சாப்பிட ஆரம்பித்தார் . ஸ்பூனால் சாப்பிடுங்கள் அதுதான் சுத்தம் ; ஆரோக்கியம் என்றார் சர்ச்சில் . இல்லை , கைதான் சுத்தம் . ஏனென்றால் என் கையை நான் மட்டுமே பயன்படுத்த முடியும் . அதனால் கைதான் சுத்தம் என்றாராம் . என்ன நண்பர்களே நீங்க எப்படி ஸ்பூனால் தானா ? இல்லை கையாலாயே எடுத்து சாப்பிடுறீங்களா . பதிலை மறக்காமல் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ……….

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in மறக்கமுடியாத நிகழ்வுகள், வின்ஸ்டன் சர்ச்சில். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s