அதிசயம் சில நிமிடம் பேசினால் பல கோடி பணம் !!!!

‘பேசுவது நாக்கின் வேலை; கேட்பது காதின் வேலை. பேசுவது வெளிப்படுத்துவது; கேட்பது உள்வாங்குவது.
வியாபார மொழியில் சொல்வ தென்றால் பேசுவது விற்று முதல்; கேட்பது கொள்முதல்.
விற்றால்தான் லாபம் கிடைக்கும்; வாங்கினால்தான் விற்பதற்கு சரக்கு இருக்கும்.
விற்பது நல்லதா? வாங்குவது நல்லதா? என்று கேட்டால், விற்க வேண்டிய இடத்தில் விற்பதும், வாங்க வேண்டிய இடத்தில் வாங்குவதும் நம் பொறுப்பு. இப்படி எப்பொழுதோ எங்கோ படித்த ஞாபகம்
 பேச்சாற்றல் நம்மிடம் உள்ள அற்புதச் சக்தி. இதை எத்தனை பேர் முறையாகக் கையாளுகிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம். எல்லோரும் நன்கு பேசக் கற்றிருக்கிறார்கள். ஆனால் பேச்சைப் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள்? உணர்ச்சி மற்றும் தகவல்களை வெளிப்படுத்துவதற்காக இறைவன் அளித்த பேச்சாற்றலைப் பலரும் தவறாகவே பயன்படுத்துகின்றனர். மிகச் சிலரே பயனுள்ள சொற்களை அளந்து பேசுகிறார்கள்.

எதைப் பேச வேண்டும். எப்படிப் பேச வேண்டும், யாரிடம் யாருக்காகப் பேசுகிறோம்? எவ்வளவு பேச வேண்டும். எங்கு எப்போது பேச வேண்டும் என்பன போன்ற நெறிமுறைகளை உணர்ந்து பேசுபவர்களைக் காண்பது அரிதாகிவிட்டது.
எப்படிப் பேச வேண்டும்? என்பது குறித்து நம் பெரியோர்கள் நிறைய பேசியிருக்கிறார்கள். வாக்கை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவே இனியவை கூறல், வாய்மை, புறங்கூறாமை பயனில சொல்லாமை சொல்வன்மை என்று பல அதிகாரங்களை இயற்றியிருக்கிறார் வள்ளுவர்.

பயனற்ற சொற்களைப் பேசுவதால் நேரமும் ஆற்றலும் விணாகிறது. நம்மில் பலர் ஒன்று தற்பெருமை பேசுகிறார்கள். இல்லையெனில், மூன்றாம் நபரைப் பற்றி புறங்கூறிப் பேசுகிறார்கள். ஓயாது பேசுபவனின் மனம் சமுத்திரத்தின் மேற்பரப்பு போன்று அலைபாயும் அவனது சொற்களில் பேரிரைச்சலே எஞ்சியிருக்கும். சிறிது காலத்துக்குப் பிறகு அவன் சொற்களுக்கு அடிமையாகி விடுகிறான். அவனுக்கும் அமைதிக்கும் வெகுதூரம். எதிரில் ஆள் இல்லாத பட்சத்தில் பரபரவென்று செல்போனை உயிர்ப்பித்து வம்பு பேசத் துவங்கிவிடுவான்.

இப்படிப்பட்டவர்கள் கேட்டு, கவனித்து உள்வாங்கும் ஆற்றலை இழந்து விடுகிறார்கள். ஆன்மிகச் சொற்பொழிவுக்குச் சென்றாலும் அங்கே பேசப்படுவதை ஒரு மணி நேரம் கூட இவர்களால் செவிமடுக்க முடியாது. கேட்கத் துவங்கிய 2வது நிமிடமே இவர்களின் உள்ளம் பேசுபவரை எடைபோடும். இதனால் கேட்பதும் சிந்திப்பதும் அறுபடுகிறது. ஆனால் சொற்களைக் கையாளத் தெரிந்த மனிதன் கெட்டிக்காரன். அறிவாளி. அவன் சொற்களைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறான். அவன் உள்ளம் அமைதியில் நிலைத்திருக்கும். அவனால் பிறர் சொல்வதை பொறுமையாக செவிமடுக்க முடியும்.

எமது சாஸ்திரங்கள் உண்மையே பேச வேண்டும் என்பதுடன், அதனை இதமாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. உண்மை பேசுகிறேன் என அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதலும் தவறு. பிறரை துன்புறுத்தாத வாய்மையும் இனிமையும் நலனும் உடைய சொற்களைப் பேசுதல் வாக்கினால் செய்யும் தவம் என்கிறார் கிருஷ்ணர்.

எனது வாக்கு தேன் போன்று இருக்கட்டும் என்றொரு பிரார்த்தனை வேதத்தில் உண்டு. யாகாவாராயினும் நா காக்க என்று நாவடக்கத்தை வலியுறுத்துகிறார் வள்ளுவர். உண்மை பேசு இனிமையாகப் பேசு உண்மையாயினும் நலம் தராதவற்றைப் பேசாதே என்கிறார் மனு நீதிச் சோழன்.

ஆம் பயனுள்ள சொற்களையே இடம் பொருள் ஏவல் அறிந்து தகுந்த காலத்தில் பேச வேண்டும்.
ஆனால் சாப்பிடாமல் கூட இரண்டு நாள் இருந்து விடலாம். பேசாமல் எப்படி இருப்பது என்று கேட்பவர்களும் உண்டு. இவர்கள் தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும். தனக்கும் பிறருக்கும் பயன்படாத கடுமையான புறங்கூறும் பொய்யான சொற்களை அறவே தவிர்க்க வேண்டும்.

நமது எண்ணம், சொல், செயல் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருப்பதற்கு ஆர்ஜபம் என்று பெயர், இதனை எவர் ஒருவர் 12 வருடங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் சொல்வதெல்லாம் சத்தியமாகும் என்கிறது சாஸ்திரம். எனவேதான் மகான்களது வாக்கு பொய்ப்பதில்லை.

உள்ளத்தில் உண்மையுண்டானால் வாக்கினில் ஒளியுண்டாகும் என்றார் மகாகவி பாரதியார்.
பலருக்கு இங்கிதம் தெரிவதில்லை. என் சுபாவமே அப்படித்தான். மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன். பட்டென்று பேசிவிடுவேன் என்று சொல்பவர்களைப் பார்க்கலாம். ஆனால் இவர்களிடம் வேறு எவரேனும் இங்கிதமின்றிப் பேசிவிட்டால் அதை ஏற்க முடியாமல் தவிப்பதையும் காண முடியும்.
ஆறுதல் சொல்ல வேண்டிய நேரத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி சூழலை மேலும் மோசமாக்கும் சொற்களை எந்தவித விழிப்பு உணர்வும் இன்றி கொட்டிவிடுவார்கள் பலர். இது தவறு. சொல்ல வேண்டியதை சுருக்கமாகச் சொல்லப் பழக வேண்டும். அனுமனை சொல்லின் செல்வர் என்கிறோம். அவர் இங்கிதம் அறிந்தவராக, சரியான நேரத்தில் சீதாவிடம் சென்று சரியான சொற்களைக் கூறி தன்னை அறிமுகம் செய்து பேசியதையும், திரும்ப வந்து ஸ்ரீராமனிடம் செய்தி கூறிய பாங்கையும் ரசித்தால் மட்டும் போதாது. எப்படிப் பேச வேண்டும் என்பதை அனுமான் மூலம் கற்றுக்கொள்ளவும் வேண்டும்.

சொற்களால் வாழ வைக்கவும் முடியும். சாகடிக்கவும் முடியும். நாம் பேசிய சொற்கள் நமக்கு எஜமானர்கள். பேசாத சொற்களுக்கு நாம் எஜமானன் என்பார்கள். ஆயுதங்களைவிட மிக வேகமாகச் சென்று ஒருவரின் உள்ளத்தைக் குத்திக் கிழிக்க வல்லவை சொற்கள். ஆத்திரத்திலும் அவசரத்திலும் அள்ளி இறைக்கும் சொற்கள் கேட்பவரின் உயிரைக் குடிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே சொற்களுக்குள் மாட்டிக் கொள்ளாமல் சொற்களை ஆளும் கலையை அறிய வேண்டும். வாரம் ஒரு முறையோ அல்லது ஒரு நாளில் சில மணி நேரமோ மெளனம் பழக வேண்டும். சொற்களின் மதிப்பை அறிய வேண்டும்.

“சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா
இருப்பதற்கே
அல்லும் பகலும் எனக்கு ஆசை
பராபரமே

என்கிறார் தாயுமானவர். பேச்சைக் குறைப்பதே யோகத்தின் முதல் படி என்கிறார் பதஞ்சலி மகரிஷி. பேச்சைக் குறைத்தால்தான் மனதை உள்முகமாகத் திருப்ப முடியும். சொற்களை அலட்சியமாகப் பயன்படுத்தும் மனிதன் வாழ்க்கையின் இலட்சியத்தை மறந்து விடுகிறான். சுற்றியுள்ள மனிதர்களை இயற்கையை இறைவனை தன்னை உற்று நோக்கத் தவறி விடுகிறான். வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவன் பேச்சைக் குறைப்பான். கவனத்தை செயலில் காட்டுவான்.

எதிரில் உள்ளவரை பேசவிடாமல் குறுக்கிடுவது அவரின் உடல் மொழியையும் முகாபாவத்தையும் கண்டு கொள்ளலாமல் பேசிக் கொண்டே செல்வது ஆகியன அநாகரிகத்தின் உச்சம் என்பதை அறிய வேண்டும்.

பெரியோர்கள் பிறரது குணங்களையே பேசுவர். குற்றங்களைப் பெரிதாகச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். வீண் பேச்சுகளால் நமது நேரம் மட்டுமல்ல அருகில் இருப்பவர் நேரமும் வீணாகும். குறைவாகப் பேசி நிறையக் கேட்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வாயையும் இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறார் இறைவன்.

 ” திறனறிந்து சொல்லுக சொல்லை
அறனும்
பொருளும் அதினினூங்கு இல் ”

சொல்லின் திறத்தை அறிந்து சொல்லும் சொல் வன்மையைவிட அறமும் பொருளும் ஒருவருக்கு வேறு இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

ஒருவர் எத்தனையோ மணி நேரம் பேசினாலும் கூறிவிட முடியாத விஷயத்தை வேறு ஒருவர் சில சொற்களில் கூறிவிடுவார்.

பெரியோரிடம் நன்கு கற்றறிந்து, கற்றதை உள்வாங்கி, ஆழ் மனதில் இருத்தி சிந்தித்துத் தெளிந்தவர்களின் சொற்கள் கேட்பவர் உள்ளத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் முத்து உதிர்வது போல ஓரிரு வார்த்தைகளை அவர்கள் உதிர்த்தாலும், அதனால் மிகுந்த நன்மை விளையும். எனவேதான் மகான்கள் ஓரிரு வார்த்தைகள் பேசினாலும் அதன் மூலம் அபரிமிதமான மன அமைதியை நம்மால் உணர முடிகிறது.

அன்பு கலந்த வஞ்சனை அற்ற மெய்ப்பொருளை அறிந்தவர்களது சொற்கள் இனிமையானவை. இதையே செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். தூய்மையும் அமைதியும் நிறைந்த உள்ளத்திலிருந்து ஆற்றல் மிகுந்த சொற்கள் பிறக்கின்றன என்றார் விவேகானந்தர்.

மன அமைதியைக் குலைப்பதும் தற்காலிக இன்பம் தருவதும் பண்பற்ற, பயனற்றதுமான சொற்களைப் பேசுபவர்கள் எங்கும் எப்போதும் கிடைப்பார்கள். ஆனால் அந்த தருணத்தில் துன்பத்தைத் தருவதாக இருந்தாலும் நிலையான இன்பம் தரும் சொற்களை அன்பு கலந்த கண்டிப்புடன் சொல்பவர்கள் கிடைப்பது அரிது. ஆன்மிக வாழ்வின் குறிக்கோளை அடைய விரும்புபவர்கள். ஆரம்பத்தில் துன்பம் தந்தாலும் காலப்போக்கில் இன்பம் தரும் பயனுள்ள சொற்களைப் பேசுபவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்கள் ஒரு சாரார். ஆனால், அவர்களது பேச்சு சிந்தனையைத் தூண்டுவதாக அமையுமா என்று பார்க்க வேண்டும். சிலர், சிந்தனையைத் தூண்டுமாறு பேசுவார்கள். ஆனால் சிரிக்க வைக்க மாட்டார்கள். இன்னும் சிலர், உயர்ந்த சிந்தனையை எந்தவித இறுக்கமும் இன்றி நகைச்சுவையுடன் வழங்குவார்கள். இதைப் பகுத்தறிந்து ஒவ்வொருவரும் தன்னைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தன்னிடம் பேசுபவர் எந்த நோக்கத்துடன் பேசுகிறார் என்பதை அறிந்து அவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

இனிக்க இனிக்கப் பேசினாலும், பயனற்ற, பண்பற்ற கருத்துகளை ஏற்கக்கூடாது. கடுமையாகச் சொன்னாலும் பண்பை வளர்க்கும் பயனுள்ள கருத்துகளை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

சரி என்னடா இவன் தலைப்பில் ஒன்றை வைத்து ஏதேதோ சொல்கிறானே என்று எண்ணுகிறீர்களா ?. சரி இனி விசயத்திற்கு வருவோம். நாம் எழுத்தின் மூலமாக பணம் சம்பாதித்தவர்களை பார்த்து இருக்கிறோம் . சிலரின் எழுத்துகளில் அடிமையாகி அது என்ன விலை என்றாலும் வாங்கி படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதும் தலை சிறந்த எழுத்தாளர்களும் இருக்கின்றார்கள் .

ஆனால் பேச்சால் இதுவரை நமக்கு தெரிந்த அளவில் பிறரை கவரும் வகையில் பேசும் திறன் வாய்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள் அதில் ஒரு சிலர் மேடை பேச்சாளர்கள் . நாம் அனைவரும் சாதாரணமாக பேசுவாதுபோல் பலரால் மேடைகளில் சென்று பேசுவது என்பது இயலாத ஒன்று . ஆனால் சிலர் எப்பொழுதும் எதுவுமே பேசமாட்டார்கள், பார்ப்பதற்கு இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் மிகவும் அமைதியாக சாதாரணமாக இருப்பார்கள் ?ஆனால் மேடைகளில் அவர்கள் பேச ஆரம்பித்தால் மடை திறந்தாற்போல் இருக்கும் .

சிலர் தேர்தல் நேரத்தில் பேசுவதற்கு என்றே தாயார் நிலையில் வைத்திருப்பார்கள் . அதுதான் நமக்கெத் தெரியுமே அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று . சில விழாக்களில் சிறப்பு பேச்சாளர் என்று சிலர் இருப்பார்கள் இப்படி பேச்சிலும் புகழ்பெற்ற எத்தனையோ மனிதர்களை நாம் பார்த்து இருக்கிறோம் . ஆனால் இவர்களில் யாரும் பேச்சால் சம்பாதித்து இருக்கிறார்களா என்று பார்த்தால் ஆனவருக்கும் தெரிந்த ஒரே பதில் யாரும் இல்லை என்பதுதான் வரும் . ஆனால் பேச்சால் உலகிலயெ அதிகம் பணம் ஒருத்தர் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார் என்றால் நீங்கள் நம்புவீர்களா ? . நம்பித்தான் ஆகவேண்டும் .

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான டோனி பிளேர் ஒரு நிமிடச் சொற்பொழிவுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார்.

லான்ஸ்டவுண் பார்ட்னர்ஸ் என்ற லண்டன் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பேசுவதற்காக இந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்தக் கட்டணம் உண்மைதானா என்ற கேள்விக்கு டோனியின் பேச்சாளர் பதில் கூறவில்லை. ஆனால் உலக அளவில் சிறந்த சொற்பொழிவாளராக டோனி திகழ்கிறார் என பெரும் சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார். அவரது கட்டுரைகளுக்காக அவது புத்தகத்தை வெளியிடும் நிறுவனம் 46 லட்சம் பவுண்டுகள் தந்துள்ளது என்றார்.

அமெரிக்க வங்கி ஜேபி மார்கன் மற்றும் ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் எனும் இரண்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராக டோனி இருக்கிறார். ஜேபி மார்கன் ஆண்டுக்கு 20 லட்சம் பவுண்டுகள் வழங்குகிறது. ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் 5 லட்சம் பவுண்டு வழங்குகிறது. இதைத் தவிர அவருக்கு ஆண்டுக்கு 63,000 பவுண்டுகள் ஓய்வூதியமும் கிடைக்கிறது.

ஸ்பெயின் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நிகழ்த்திய 90 நிமிட சொற்பொழிவுக்காக 1,80,000 பவுண்டுகள் அவருக்கு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு இதுவரை ஒரு கோடி பவுண்டுகள் டோனி பிளேர் சம்பாதித்திருக்கிறார் என கணக்கிட்டுள்ளனர்.

என்ன நண்பர்களே இப்பொழுதாவது நம்புகிறீர்களா நான் சொன்னது உண்மைதான் என்று . அதுதான் பேச்சு திறமைக்கு எவளவு மதிப்புனு தெரிந்துவிட்டது அல்லவா இனி உங்களில் யார் யாருக்கு ஒரு நிமிடம் பேசுவதற்கு எவளவு கட்டணம் வேண்டும் என்று அப்படியா ஒரு கோர்வையா பின்னூட்டத்தில எழுதுங்க .தேவைப்பட்டால் உங்களுக்கு அழைப்பிதழ் விரைவில் அனுப்பப்படும் .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ……….

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in உலகம், சிறந்த பேச்சாளர்கள், பேச்சு திறமை, மேடைப் பேச்சாளர்கள். Bookmark the permalink.

2 Responses to அதிசயம் சில நிமிடம் பேசினால் பல கோடி பணம் !!!!

  1. DrPKandaswamyPhD சொல்கிறார்:

    நல்ல கருத்துகள். தனியே காப்பி எடுத்து வைத்திருக்கிறேன் அசைபோட.

  2. velumani1 சொல்கிறார்:

    பொதுவான எந்த சப்ஜெக்ட் பேச வேணும்னாலும், என்னை அழைன்ன்னங்க. வரேன். மோட்டிவேசன்,மெமோரி டெக்னிக், தன்னார்வ ஊக்கம்,இப்படி!. . . . .கல்லூரிகள்,பள்ளிகளில் பேசிக் கொண்டு இருக்கேன். நன்றி!velumani1@gmail.com, Mobile:9600 7900 33

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s