இன்று ஒரு தகவல் 19 – அதிசய விலங்கு கங்காரு !!!

னைவருக்கும் வணக்கம் . நாம் இப்பொழுது வசிக்கும் உலகத்தில் தினம்தோரும் பயன்படுத்தும் பொருட்கள் முதல் நம் கண்களில் தினம்தோரும் காட்சி தரும் பறவைகள் , மிருகங்கள் ,பயணம் செய்யும் வாகனங்கள் என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் உள்ளது . அதனால்தான் நம் அனைவரும் அதை பற்றி எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது . ஆனால் இவைகளுக்கு எல்லாம் எப்படி இந்த பெயர்கள் வந்தது என்று நம்மில் எத்தனை பெயருக்குத் தெரியும் என்பது ஒரு தெரியாத புதிர் தான் . இன்னும் சிலருக்கும் தங்களின் பெயர்களே எதன் அடிப்படையில் வைக்கப்பட்டது என்பதுகூட தெரியாமல் நம்மில் பலர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் . அதிலும் இந்த உலகத்தில் உள்ள உயிர்களின் பெயர்கள் உருவாகியது எப்படி என்று நாம் ஆராயத் தொடங்கினால் அதுபோல் வியப்பளிக்கக்கூடிய விஷயம் வேறு எதுவும் இல்லை இந்த உலகத்தில் என்பதுதான் உண்மை . சரி இனி விஷயத்திற்கு வருகிறேன் .

லகத்தில் பல விலங்குகள் உள்ளன . ஆனால் அதில் மிகவும் வினோதமாக ஒரு விலங்கு என்று பார்த்தால் கங்காரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இவை நான்கு கால்களைக் கொண்டிருப்பினும் தன் பின்னங்கால்களால் தத்திச்செல்கின்றன. சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகிறது. இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப் பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன.

குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இந்தப் பையினுள்ளேயே இருக்கின்றது .கங்காருக்களில் 56 இனங்கள் இருக்கின்றதாம் .,பெரிய கங்காரு 90 கிலோ வரை எடையிருக்கும் ,வாலிலிருந்து மூக்கு வரை 10 அடி நீளமிருக்கும் .ஆபத்து காலத்தில் மணிக்கு 48 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.இரண்டு மீட்டர் உயரமும்,​​ 6 மீட்டர் நீளமும் ஒரே மூச்சில் தாண்டவல்லது. பிறக்கும் போது கங்காரு குட்டியின் நீளம் ஓர் அங்குலமே இருக்கும் என்றால் பார்த்திதுக்கொள்ளுங்கள்

பிரித்தானிய நாடோடிகள் முதன் முதலாக அவுஸ்திரேலியாவை வந்தடைந்தபோது ஆங்காங்கே ஒரு விசித்திர மிருகம் பல அடி உயரத்திற்கு துள்ளித் திரிவதைக் கண்டார்கள்.அவர்கள் இப்படி ஒரு மிருகத்தை முன்னர் அறியாததால் அதன் பெயரைத் தெரிந்து கொள்ள முயன்றார்கள்.அங்குள்ள ஆதிவாசிகளுடன் கதைப்பதற்கு இவர்களுக்கு அவர்கள் பாஷை தெரியாததால் சைகையினால் அதன் பெயரென்னவென்று கேட்டார்கள். அவர்கள் அதற்கு ‘ Kan Ghu Ru’ என்று பதிலளித்தார்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் ‘ kangaroo’ என்று இவர்கள் புரிந்து கொண்டார்கள். அதைத்தான் நாங்கள் கங்காரு என்று அழைக்கிறோம்.ண்மையில் அந்த ஆதி வாசிகள் ‘ நீங்கள் கேட்பது புரியவில்லை ‘ என்பதைத்தான் தங்கள் மொழியில் ‘ Kan Ghu Ru’ என்று சொன்னார்களாம் . அதுவே காலப்போக்கில் உலகம் முழுவதும் அந்த மிருகத்திற்கு . அதே பெயர் நிலைத்துவிட்டதாம் .

 ண்மையில் ஒரு செய்தி படித்தேன். உலகத்தை அழிக்கக்கூடிய பல்வேறு சக்திகளில் ஒன்றான, ஆபத்தான மெத்தேன் வாயுவை கங்காருகள் வெளியிடுகிறதாம். வெளியாகும் அளவு குறைவு என்றாலும் ஆஸ்திரேலியாவில் நிறைய கங்காருகள் இருப்பதால் வாயுவின் வெளிப்பாடும் மொத்தமாகப் பார்த்தால் அதிகமாக இருக்கிறதாம்.

 ப்போதைய நிலவரப்படி அங்குள்ள கங்காருகளின் எண்ணிக்கை சுமார் 34 மில்லியன். 2020ல் இது 240 மில்லியனாக மாறும் என ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். இந்த கங்காருகள் யாருக்கும் அடங்குவதில்லையாம். செடி, கொடிகளைப் பழாக்குதல், நீர் ஆதாரங்களை அழித்தல், சுற்றுச்சூழலை மாசுப்படுத்துதல் போன்ற எதிர்மறை செயல்களை செய்கின்றனவாம்.

ங்காரு எங்கள் நாட்டுச் சின்னம் தான். அதற்காக சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாயுவை அவை வெளிப்படுத்துவது ஆரோக்கியமானதல்லவே! எனவே, சென்டிமென்டுக்கு இடம் தராதீர்கள். ஆரோக்கியதிற்கு முன்னுரிமை தாருங்கள்; கங்காருவைச் சாப்பிடுங்கள்! என்கின்றனர் ஆஸ்திரேலியர்கள் .இப்பொழுது யேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் கங்காரு இறைச்சிக்கு வரவேற்பு பெற்றுள்ளதாம் .


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in இன்று ஒரு தகவல், கங்காரு, வினோதங்கள், விலங்குகள், Indru oru thagaval, kangaroo, Macropus. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s