அனைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையைத் தயாரித்து வழங்கியவர் ஜவஹர்லால் நேரு.
மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்துமாம்
லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.
உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டரங்கம் பராகுவே நாட்டில் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2,40,000 பேர் அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்கலாமாம்.
பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது.இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி
கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடுமாம்.
ஒலியைவிட வேகமாச் செல்லும் விமானத்தின் பெயர் சோனிக் விமானம். இது 1969-ல் முதன்முதலாகப் பறந்த போது மணிக்கு 2,333 கி.மீ. வேகத்தில் பறந்தது.
தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்குமாம்.
சூனியம் அல்லது சுழி (zero) என்ற எண் இந்தியர்களால் 3 ஆம் நூறாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது
நிலவின் மேற்பரப்பை துல்லியமாக படம் பிடித்த முதல் விண்கலம் ரேஞ்சர் 7 என்பதாகுமாம் .
புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
super