இன்று ஒரு தகவல் 31 – உலகப் பணக்காரர் PART 2 !!!

அனைவருக்கும் வணக்கம் தினமணி நாளிதழில் எனது அனைத்துப் படைப்புகளையும் தவறாமல் இடம் பெற ஆதரவு தந்துகொண்டிருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் ஆயிரமாயிரம் நன்றிகள்.

எனது இன்று ஒரு தகவல் 30 – உலகப் பணக்காரர் PART 2 !!! 1 என்ற முதல் பதிவில் திருப்பதி வெங்கடாசலபதி என்றவுடன் எல்லோருக்கும் பணக்காரக் கடவுள் என்றுதான் தெரியும் ஆனால் உண்மையில் வெங்கடாசலபதி அவர் ஒரு ஏழையாம். அதிகக் கடன்கள்பட்டவர் என்றால் நம்புவீர்களா ?? இதை பற்றிய தகவல்களுடன் எனது அடுத்தப் பதிவில்
சந்திப்பதாக முடிததிருந்தேன் இதோ அதன் தொடர்ச்சி.

திருப்பதி வெங்கடாசலபதி என்றவுடன் எல்லோருக்கும் பணக்காரக் கடவுள் என்றுதான் தெரியும். ஆனால் உண்மையில் வெங்கடாசலபதி அவர் ஒரு ஏழையாம். அதிகக் கடன்கள் பட்டவராம். அவரது வரலாற்றை முழுதும் அறிந்தவர்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை இது. ஒரு முறை திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கினாராம். அப்பொழுது குபேரன் எப்படி இவ்வளவு பணத்தையும் திருப்பி அடைப்பீர்கள் என்று கேட்டதற்க்கு, “”யார் யார் பாவம் செய்தார்களோ, அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப கலியுகத்தில் அவர்களிடமிருந்து பணத்தை
வசூல் செய்து கடனை அடைத்து விடுவேன்,” என அவரிடம் வாக்கு
கொடுத்துள்ளார். அதன் படித்தான் இன்றும் நாம் காணிக்கைகளாக நம்மால்
இயன்றதை கோவில் உண்டியலில் போட்டுக்கொண்டு இருப்பதாக புராணக் கதைகள் சொல்கின்றனவாம். எது எப்படியோ ஆனால் இவர் மட்டும் எப்படி பணக்கார கடவுள் என்று சொல்லப்படுகிறார் என்று பார்ப்போம் .

உலகத்தில் மிகவும் வேகமாக நிரப்பப்படும் உண்டியல்கள் திருப்பதி
வெங்கடாசலபதி கோவிலில் இருக்கும் உண்டியல்கள்தானாம். என்ன வியப்பாக இருக்கிறதா !. உண்மைதான் சாதாரண நாட்களில் கூட பத்து உண்டியல்கள் நிரம்பிவிடுகிறது என்றால், திருவிழாக்காலங்களில் சொல்லவே வேண்டாம். “காவாளம்’ எனப்படும் மிகப்பெரிய பித்தளை அண்டா துணி சுற்றப்பட்டு ஒரு வண்டியில் வைத்து நமது பார்வைக்கு தெரியாமல் உள்ளே நிறுத்தப்பட்டிருக்குமாம். அது நிறைந்தவுடன் அந்த வண்டியை நகர்த்தி விட்டு, புதிய அண்டாவுடன் இன்னொரு வண்டி உள்ளே தள்ளப்படுமாம். நிரம்பிய பானை பாதுகாப்புடன் உண்டியல் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்படுமாம். அது மட்டும் இல்லை ஒரு அண்டாவிற்கு குறைந்தது வசூல் கோடிக்கு குறைவாக இதுவரை இருந்ததே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் ஒரு நாளைக்கு
 எவ்வளவு மக்கள் அங்கு சென்று காணிக்கை செலுத்துவார்கள் என்று ..

திருப்பதி வெங்கடாஜலபதிதான் இப்போது உலகத்தின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் ! இவரின் வங்கியின் சொத்து மதிப்பு மட்டும் 1.5 லட்சம் கோடியைத் தாண்டி விட்டதாம். இந்தப் பணத்தில் இருந்து மட்டும் வட்டியாக வருடத்திற்கு 300 கோடி பணம் வருகிறதாம். உலகத்திலியே ஒரே நேரத்தில் அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் இந்த திருப்பதி கோவிலும் ஒன்று. நாள் ஒன்றிற்கு ஒரு இலட்சம் மக்கள் வந்து செல்கிறார்களாம் . வாரம் ஒன்றிற்கு பனிரெண்டு முதல் 15 கிலோ வரை தங்கம் காணிக்கையாக உண்டியலில் மக்களால் போடப்படுகிறதாம். இதோடு மட்டும் இல்லாமல் இன்னும் சில கோடீஸ்வரர்களும் பக்தி பரவசத்தில் தங்களை அறியாமல் தாங்கள் அணிந்திருக்கும் அனைத்து நகைகள், வைரங்கள் அனைத்தையும் உண்டியலில் கொட்டி விடுகிறார்களாம் .

இப்படித்தான் ஒரு முறை கர்நாடக அமைச்சர் ஒருவர் வைரக் கற்கள் பதித்த ஒரு தங்கக் கிரீடத்தைக் காணிக்கையாகக் கொடுத்தாராம். அப்பொழுதும் அங்கு இருக்கும் நிர்வாகிகள் இதைப்போய் எதற்க்கு கொடுக்கிறீர்கள் இது அப்படி என்ன பெரிய காணிக்கையாக இருக்கப் போகிறது என்று கேட்க


அதற்க்கு அந்த மந்திரி சொன்ன பதில் அங்கு நின்ற அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். ஆமாங்க அவர் கொடுத்த அந்த கிரீடத்தின் விலை ஜஸ்ட் 4.5 கோடிகள்தானாம். இதைவிட அரசாங்கத்தின் கணக்கிலோ அல்லது மறைமுகமாகவோ இன்னும் இந்த  கோவிலுக்கு வரும் காணிக்கைகள் ஒவ்வொன்றுமே மில்லியனை தண்டுமாம் !


 கோவிலின் நகைகளின் சொத்து மதிப்பை இது வரை கணக்கிடப்படவில்லையாம். ஆனால் இதுவரை உள்ள நகைகளின் மதிப்பு 12 டன் இருக்குமாம். ஒரு டன் என்றாலே ஆயிரம் கிலோ என்றால் 12 டன் என்பது எவ்வளவு இருக்கும் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். என்ன இன்னும் புரியவில்லையா.! நாம் தினமும் பார்க்கும் லாரி போல் குறைந்தது ஐந்து லாரிகள் வேண்டுமாம் இந்த நகைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள். மொத்த நகைகளின் மதிப்பு மட்டுமே 50 கோடியை தண்டிவிட்டதாம் .


இதுவரை பக்தர்கள் திருப்பதிகோயிலுக்கு தானமாக வழங்கிய நிலங்களின் மதிப்பு மட்டும் 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்குமாம். திருப்பதியில் முன்பு ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு முறைதான் உண்டியலை மாற்றினார்கள். இப்போது தினமும் 20 தடவைக்கு மேல் உண்டியல் மாற்றப்படுகிறது. ஏழுமலையான் அணிந்திருக்கும் கிரீடம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் அளித்தது. தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான் 100 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தில் சங்கிலி
ஒன்றை கொடுத்திருக்கிறார். இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 35ஆயிரம் பேர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !

இதற்கு பிறகும் நான் சொல்லத் தேவை இல்லை எதற்காக இவர் பணக்காரக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார் என்று. நீங்களே அறிந்திருப்பீர்கள் இதற்கு காரணங்கள் என்னவென்று.

ஆஹா நண்பர்களே ஒன்று மறந்துபோச்சே என்ன பாக்குறீங்க அதுததாங்க திருப்பதி லட்டு. இதில் என்ன இருக்கிறது என்று கேக்குறீங்களா இருக்குங்க இருக்கிறது நீங்கள் இதுவரை லட்டு என்பதை
அதிகபட்சமாக எவ்வளவு பெரிதாகப் பார்த்து இருப்பீர்கள் ஒரு ஒரு ஆப்பிள் சைஸ் அல்லது ஒரு பூசணிக்காய் சைஸ் ஆனால் திருப்பதியில் தினமும் உருவாக்கப்படும் லட்டின் எடை 13000 கிலோ என்றால் நம்புவீர்களா.!. இதை பற்றி பல வியப்பான தகவல்களுடன் உங்களை அடுத்தப் பதிவில் சந்திக்கிறேன்.எதிர் பார்ப்புகளுடன் காத்திருங்கள்.
                                                       

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

                                                    


Advertisements

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in இன்று ஒரு தகவல், திருப்பதி கோவில், பணக்காரக்கடவுள், GK, Indru oru thagaval, RIGH GOD, Thirupathi venkatachalapathy. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s