இன்று ஒரு தகவல் 44- ஜிம்னாஸ்டிக்ஸ் சரித்திரம் !!!

னைவருக்கும் வணக்கள் . இன்று நாம் அனைவரும் இன்று ஒரு தகவலின் வாயிலாக விளையாட்டுக்களில் மிகவும் தனி திறமைகளுடன் பல சிறந்த புதுமைகளை கொண்டு திகழும் ஜிம்னாஸ்டிக் Gtmnastics விளையாட்டைப் பற்றி அறிந்துகொள்ளப் போகிறோம் விளையாட்டுக்களில் மிகவும் வண்ணமயமான விளையாட்டு என்றால் அது ஜிம்னாஸ்டிக்தான் . சரி இந்த ஜிம்னாஸ்டிக் Gtmnastics விளையாட்டுப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும் . ஆனால் இந்த ஜிமான்ஸ்டிக் Gtmnastics விளையாட்டு எப்படி தோன்றியது என்று கேட்டால் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை . ஜிமான்ஸ்டிக் Gtmnastics விளையாட்டின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதன் நோக்கத்தில்தான் இந்த பதிவு . சரி இனி நாம் விஷயத்திற்கு வருவோம் . ஆரோக்கியமான உடல்வாகு தான் ஆரோக்கியமான உள்ளங்கள் உருவாக அடித்தளமாகின்றன. சரீர சக்தியை பெற்றுத் தரும் சமவேளையில் மனோ வலிமையையும் ஈட்டத் தக்க ஒரு விளையாட்டைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பதில் தீவிரமாகத் திளைத்த கிரேக்க முன்னோர்கள் கண்டு பிடித்த விளையாட்டுக் கலைதான் ஜிம்னாஸ்டிக் Gtmnastic எனும் கலை.
கிரேக்கர்கள் பல சிறந்த விளையாட்டுக்களை இந்த உலகத்திற்கு தந்த பெருமைக்குரியவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது . அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் இன்று கால்களில் சக்கரங்களை கட்டிக்கொண்டு உருண்டு கொண்டிருக்கும் நமது போட்டியான வாழ்க்கை முறை அன்று மிகவும் தீவிரமாகக் காணப்பட்து. ஒருவரை ஒருவர் வெல்ல மக்களுக்கு அன்று சண்டைப் பயிற்சிகள் தேவைப்பட்டன. இவற்றுள் அடங்கிய செயற்பாடுகள் காலப் போக்கில் ஜிம்னாஸ்டிக் Gtmnastic எனும் கலைக்கு வித்திட்டன. .
லகத்தில் இதுவரை எந்த ஒரு விளையாட்டிலும் இல்லாத வியப்புகள் இந்த ஜிம்னாஸ்டிக் Gtmnastics விளையாட்டில்தான் தொடங்கியது என்று சொல்லலாம் . ஆம் முதன் முதலில் இந்த விளையாட்டு கிரேக்கில் நிர்வாணத்துடன்தான் தொடங்கியது . உடம்பில் எந்த ஆடைகளும் இன்றி , எந்த ஒரு சலனமும் இன்றி அனைவரும் முழு ஈடுபாடுடன் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்கள் . அது மட்டும் இல்லாது அன்றைய நிலையில் இந்த விளையாட்டு ஆண்களுக்கு மட்டுமே என்ற நிலையில் இருந்தது .
 பின்பு காலப்போக்கில் பெண்களும் இந்தக் கலையில் ஆர்வம்கொள்ள ஆரம்பித்தனர். அன்று யுத்தம் புரிய வலிமையான இளம் சமுதாயமொன்று தேவைப்பட்டது. வலிமை மிக்க சமுதாயமொன்று உருவாக வேண்டுமானால் வலிமையுள்ள அன்னையர் சமூகமொன்று அவசியம் என்ற நிலைப்பாடு அன்றைய கிரேக்கத்தில் நிலவியது. இதன் அடிப்படையிலேயே பெண்களின் பங்களிப்பு ‘ஜிம்னாஸ்டிக்’ Gtmnastics கலையில் அதிகரிக்க ஆரம்பித்தது.
துவரை நாம் விளையாடி மற்றும் பார்த்து மகிழ்ந்த விளையாட்டுகளில் இல்லாத பல சிறந்த சிறப்புகள் இந்த ஜிம்னாஸ்டிக் Gtmnastic விளையாட்டிற்கு உண்டு ஜிம்னாஸ்டிக் Gtmnastic விளையாட்டு என்பது பொழுது போக்கிற்காக மாட்டும் இல்லாமல் விளையாட்டுத் துறையில் ஈடுபடும் ஒருவருக்கு உயரிய பல பண்புகளையும் ,உணர்வுகளையும் பெற்றுக்கொடுக்கிறது. சிறந்த மனோபாவம் வளரவும் இது உதவி செய்கிறது .
ரி இதுவரை நாம் இந்த ஜிம்னாஸ்டிக் Gtmnastic விளையாட்டின் சிறப்புகளையும் அதன் தோற்றம் பற்றியும் தெரிந்துகொண்டோம். இப்பொழுது இந்த விளையாட்டிற்கு ஜிம்னாஸ்டிக் Gtmnastics என்று எப்படி பெயர் வந்தது என்று தெரிந்துகொள்வோம் .கிரேக்க மொழியில் ஜிம்னோ GYMNO என்ற வார்த்தைக்கு நிர்வாணம் என்று பொருளாம் . இந்த விளையாட்டின் தொடக்கத்தில் இதற்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று எல்லோரும் கேட்ட பொழுது அன்றைய வயதான முதாட்டி ஒருவர் ஜிம்னோ Gtmno என்று கூறியிருக்கிறார் . அதாவது தமிழில் ஜிம்னோ GYMNO என்றால் நிர்வாணம் என்று அர்த்தம் . அது மட்டும் இல்லாது ஜிம்னொஷியம் என்றால் நிர்வாண உடற்பயிற்சிகளுக்கான பள்ளி என்று பெயர் .
தொடக்கத்தில் இந்த ஜிம்னாஸ்டிக் விளையாட்டை வீரர்கள் உடலில் எந்த அடிகளும் இன்றி நிர்வாணமாக விளையாடியதால் இதற்க்கு இந்த பெயர் வந்ததாம் . அதன் பின்பு கால ஓட்டத்தில் பல மாற்றங்களை இந்த விளையாட்டுக் கண்டது .இன்றைய நாகரிகத்திற்கு ஏற்றார்போல இந்த விளையாட்டை விளையாடும் வீரர்கள் தங்கள் உடம்புடன் ஒட்டிய உடைகளை அணிந்து விளையாடுகிறார்கள் . என்ன நண்பர்களே இன்றைய ஜிம்னாஸ்டிக்  Gtmnastics விளையாட்டைப் பற்றிய தகவல்கள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
 
 

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in இன்று ஒரு தகவல், உலகம், பொது, வரலாறு, விளையாட்டு, GK, Gymnastic Came, History of gymnastic, NDRU ORU THAGAVAL. Bookmark the permalink.

16 Responses to இன்று ஒரு தகவல் 44- ஜிம்னாஸ்டிக்ஸ் சரித்திரம் !!!

  1. LK சொல்கிறார்:

    muttrilum puthiya thagaval nabare.. nandri

  2. சௌந்தர் சொல்கிறார்:

    நல்லதகவல் சிறு வயது முதல் ஜிம்னாஸ்டிக்ஸ் கற்று கொண்டால் தான் சுலபமாக இருக்கும்

  3. வெங்கட் நாகராஜ் சொல்கிறார்:

    பல புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

  4. sandhya சொல்கிறார்:

    புதுசா நல்ல தகவல்கள் பகிர்த்து கொள்ளும் உங்கள்க்கு நன்றி …அருமையான விளக்கம்

  5. வெறும்பய சொல்கிறார்:

    புதிய தகவல்..பகிர்வுக்கு நன்றி.

  6. இராமசாமி கண்ணண் சொல்கிறார்:

    நல்ல தகவலுக்கு நன்றி

  7. சுசி சொல்கிறார்:

    புதிய தகவல்கள்.. நன்றி.

  8. nis (Ravana) சொல்கிறார்:

    தகவலிற்கு நன்றி

  9. சே.குமார் சொல்கிறார்:

    பல புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

  10. வானம்பாடிகள் சொல்கிறார்:

    மீண்டும் அருமையான புதிய தகவல்களுடன். பகிர்வுக்கு நன்றி.

  11. சந்ரு சொல்கிறார்:

    நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்

  12. Chitra சொல்கிறார்:

    Thank you. 🙂

  13. rk guru சொல்கிறார்:

    நல்ல பதிவு……..வாழ்த்துகள்

  14. சசிகுமார் சொல்கிறார்:

    நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  15. தேவன் மாயம் சொல்கிறார்:

    நாடியா வை மறக்கமுடியுமா?

வெங்கட் நாகராஜ் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி