இன்று ஒரு தகவல் 45 – புற்றுநோய் சேவை மையங்கள் தோன்றியது எப்படி !!!

னைவருக்கும்  வணக்கம். நமது அனைவரின் வாழ்விலும் நாம் ஒவ்வொருவரும் தினமும் எத்தனையோ எதிர்பார்புகளுடனும் ஏமாற்றங்களுடனும் வாழ்வின் நாட்களை எதோ நம்பிக்கையின் அடிப்படையில் சில நேரம் மகிழ்ச்சி, சில நேரம் சோகம் , சிலநேரம் இரண்டும் என்று அனைத்தையும் ஒன்றாக தங்களின் இதழ்களிலும் , இதயத்திலும் நிரப்பி எதோ ஒன்றின் மீதான நம்பிக்கையில் நாட்களின் ஒவ்வொரு கணங்களையும் நகர்த்திகொண்டிருக்கின்றோம் .
 இதில் இயலுமா என்ற கசியும் நம்பிக்கையுடன் பலர் . எல்லாம் இயலும் என்ற நம்பிக்கை சிகரத்தின் உயரத்தில் சிலர் . இவை இரண்டும் இன்றி புரியாத மனநிலையில் இன்னும் பலர் . இது ஒரு சாதாரண மனநிலையில் எந்த உடல் பாதிப்புகளும் இல்லாதவர்களின் இயல்பான நடைமுறைகள் . ஆனால் இதில் முழுவதும் மாறுபட்டவர்கள்தான் தாங்களே எதிர்பாராத நிலையில் எதோ ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு தினமும் பயத்துடனும், பதற்றத்துடனும் எப்பொழுது இறக்கபோகிறோமோ ! எப்பொழுது என்ன நடக்குமோ என்ற எண்ணத்தில் வாழும் நாட்களையும் நரகமாகவே எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை .
தற்காகத்தான் நமது முன்னோர்கள் சொன்னார்களோ..!! “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று. இது போன்று நோயினால் பாதிக்கப்பட்டு தினமும் அவதிப்படும் பலரை பார்க்கும் பொழுது எனக்குத் தோன்றுவதுண்டு . அந்த வகையில் புற்றுநோய் மிகவும் கொடுமையானது . இந்த கொடிய நோயைப் பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும் . ஆனால் இந்த புற்று நோய்க்காக உதவும் திட்டம் எப்பொழுது யாரால் எப்படி உருவாக்கப் பட்டது என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை . இந்த திட்டம் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழப்போகிறோம் என்று தெரிந்தும் நம்பிக்கையுடன் திகழ்ந்த ஒரு புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமியினால் தொடங்கப்பட்டதுதான் இன்று உலகத்தில் எங்கும் புற்று நோய்க்காக உதவ தயார் நிலையில் இருக்கும் குழுக்கள் என்றால் நம்புவீர்களா உண்மைதான் .
மெரிக்காவில் 1996-ம் ஆண்டு நான்கு வயதான அலெக்சாண்ட்ரா என்ற சிறுமிக்குப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாம் . ஆரம்ப கட்ட சிகிச்சைகளில் அவள் அதிக நாட்கள் உயிர் வாழ மாட்டாள் என்பது தெரிந்துபோனதாம் . சிறுமியோ மனம் தளராமல் ஆரம்ப சிகிச்சை முடித்து வீடு திரும்பியதும் .தன் வீட்டு வாசலில் எலுமிச்சை ஜீஸ் விற்கும் கடை ஒன்றை திறந்தாள் . அதன் முக்கிய நோக்கம் , அதில் கிடைக்கும் பணத்தில் தன்னைப்போல புற்றுநோய் பாதித்த சிறுவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் . அந்த அக்கறையும் , ஈடுபாடும் 2,000 டாலர்களை ஒரே வாரத்தில் வசூல் செய்து தந்ததாம் .அந்த பணத்தை தன்னை போன்று புற்றுநோயினால் பதிக்கப் பட்ட சிறுவர்களின் நலனுக்காக செலவிட்ட அலெக்சாண்ட்ரா புற்று நோய் முற்றி 2004 -ம் ஆண்டு இறந்துவிட்டாராம். ஆனால் அவள் துவக்கி வைத்த எலுமிச்சை ஜீஸ் கடைகள் உலகமெங்கும் பரவி இன்று புற்று நோய்களில் இருந்து காக்க உதவும் அறிய திட்டமாக வளர்ந்திருக்கின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
  
டிஸ்கி :  எத்தனை நாட்கள் உயிர் வாழப்போகிறோம் என்பது கூட தெரியாத ஒரு சிறுமி முன்னெடுத்த சிறு முயற்சி. இன்று பல கோடி நிதி திரட்டி உலகத்தின் மிகவும் கொடிய நோய்களில் ஒன்றான புற்று நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்கு உயிரூட்டமாக திகழ்கிறது என்றால் . எல்லாம் இருந்தும் எந்த ஒரு முயற்சியும் இன்றி தினமும் நாட்களை வீணாக கழித்துக்கொண்டிருக்கும் நம்மைப்போன்ற ஒவ்வொருவரும் முயற்சித்தால் உலகத்தில் நோயினால் பாதிக்கப்பட்டு வறுமையின் இருட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் அனைவரின் வாழ்விலும் நம்மைபோன்றவர்களின் சிறு முயற்சி நிச்சயம் விளக்கேற்றி வைக்கும் என்பது யாராலும் மறுக்க இயலாது உண்மை.
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in இன்று ஒரு தகவல், உதவி மையம், நோய்கள், புற்றுநோய், பொது, மருத்துவம், GK, Indru oru thagaval. Bookmark the permalink.

19 Responses to இன்று ஒரு தகவல் 45 – புற்றுநோய் சேவை மையங்கள் தோன்றியது எப்படி !!!

  1. வெறும்பய சொல்கிறார்:

    நல்ல தகவல் ….பகிர்வுக்கு நன்றி நண்பரே..

  2. ப.செல்வக்குமார் சொல்கிறார்:

    ///இந்த திட்டம் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழப்போகிறோம் என்று தெரிந்தும் நம்பிக்கையுடன் திகழ்ந்த ஒரு புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமியினால் தொடங்கப்பட்டதுதான்///நம்பவே முடியவில்லை ..பதிவிட்டதற்கு நன்றி அண்ணா ..!!

  3. பிரவின்குமார் சொல்கிறார்:

    வழக்கம்போல் மிகவும் பயனுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் நண்பா..!

  4. சிநேகிதன் அக்பர் சொல்கிறார்:

    பயனுள்ள தகவல்கள்

  5. jaisankar jaganathan சொல்கிறார்:

    நல்ல தகவல்நன்றீ

  6. ஸ்ரீராம். சொல்கிறார்:

    படிக்க ஏகப் பட்ட சுட்டிகளுடன் நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள். புற்று நோய் பற்றி எங்கள் பதிவு ஒன்று இங்கே….http://engalblog.blogspot.com/2010/06/blog-post_25.html

  7. நாடோடி சொல்கிறார்:

    அறியாத‌ த‌க‌வ‌ல்… ப‌கிர்விற்கு ந‌ன்றி

  8. S.Sudharshan சொல்கிறார்:

    வழமை போல நல்ல தகவல் … என்ன கொஞ்ச நாள் தகவல் காணோம் கவிதையா வருதே என்று பார்த்தேன் … :))

  9. எம் அப்துல் காதர் சொல்கிறார்:

    அருமையான பகிர்வு வாழ்த்துகள்

  10. வானம்பாடிகள் சொல்கிறார்:

    புதிய தகவல்களுடன் அருமையான பகிர்வு

  11. கே.ஆர்.பி.செந்தில் சொல்கிறார்:

    மிக மிக உபயோகமான, நெகிழ்வான தகவல், பாராட்டுக்கள்…

  12. Starjan ( ஸ்டார்ஜன் ) சொல்கிறார்:

    நல்ல தகவல்கள்.. எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது.

  13. sudhanthira சொல்கிறார்:

    உங்களின் தகவல்கள் நன்றாக உள்ளது. கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழிLink:www.secondpen.com/tamil/what is jaiku?

  14. சே.குமார் சொல்கிறார்:

    நல்ல தகவல்கள்.. எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது.

  15. ஜீவன்பென்னி சொல்கிறார்:

    பகிர்வுக்கு நன்றிகள்

  16. nis (Ravana) சொல்கிறார்:

    பாராட்டிற்குரிய சிறுமி

  17. rk guru சொல்கிறார்:

    அருமையான தகவல் சொன்னீர்கள்….வாழ்த்துகள்

  18. அருண் சொல்கிறார்:

    கடைசி பரா ரொம்ப டச்சிங்.

rk guru -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி