ஈழம் கவிதைகள் – சிறைப்பட்ட சுவாசங்கள்

கொன்று குவித்தது
உடல்களை மட்டும் இல்லை
தமிழனின் உணர்வுகளையும்தான் .!
டல்கள் இல்லை என்ற போதும்
இன்னும் சிறைப் பிடிக்கப்பட்டுதான் கிடக்கிறது
தமிழனின் சுவாசங்கள் அந்த
முள்வேலி முகாம்களில்
தோட்டாக்களின் சத்தங்களும்,
தமிழனின் கதறல்களும் மட்டுமே
இன்னும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது
நிசப்த இரவுகளிலெல்லாம்
தனிமை என்ற பெயரில் .!
ரவுகள் கடக்கும் நேரத்தில் எல்லாம்
சிறகுகளில் சிலுவைகள் சுமக்கிறது
உள்ளம் .!
தூரத்துப் பெண்ணொருத்தியின்
கதறல் சத்தம் .
அழுது அழுது வறண்டு போன
கண்களிலும் மீண்டும்
ஊற்றெடுக்கும் கண்ணீர் !
றந்த உடலென்று உணராத
குழந்தையொன்று  அங்கு

அழுகை நிறுத்தி கொங்கைகளை
 சவைந்துகொண்டிருக்கிறது .

காக்கைக்கும் , கழுகுக்கும்
பங்காளி சண்டை
இறந்த தமிழனை யார் முதலில்
ருசிப்பது என்று .
ஞ்சியதை இழுத்து செல்ல
எதிர்பார்புகளை எல்லைகளில்
நிறுத்தி காத்திருக்கும்
ஓநாய் ஒன்று .
வர்களின் உயிர்களை எல்லாம்
குடித்து முடித்த மகிழ்ச்சி களைப்பில்
ஓய்வெடுக்கும் எதிரியின் துப்பாக்கிகள் . என
ஒவ்வொன்றாய் பார்த்து ரசித்த இரவொன்று
இறந்துபோனது பகலை பிரசவித்த
சில நொடிகளில் !!!!….
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in இலங்கை, ஈழம், கவிதைகள், தமிழன் உணர்வுகள், EELAM AGATHIGAL kavithai, Eelam kavithaigal, Tamil eelam, Tamil Kavithai, tamila tamila. Bookmark the permalink.

24 Responses to ஈழம் கவிதைகள் – சிறைப்பட்ட சுவாசங்கள்

 1. நந்தா ஆண்டாள்மகன் சொல்கிறார்:

  வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லை

 2. Mohamed Faaique சொல்கிறார்:

  //இவர்களின் உயிர்களை எல்லாம்குடித்து முடித்த மகிழ்ச்சி களைப்பில்ஓய்வெடுக்கும் எதிரியின் துப்பாக்கிகள்//எதிரிகளின் துப்பாக்கி மட்டுமல்ல நம்பியவர்களின் துப்பாக்கி கூட பல முறை வெடித்திருக்கிறது.. பாதிக்கப்பட்டது அப்பாவிகள் மட்டுமே.

 3. கவிதை காதலன் சொல்கிறார்:

  கண்ணிலிருந்து கண்ணீரை வரவழைக்கும் சக்தி உங்கள் கவிதைகளுக்கு இருக்கிறது

 4. nis (Ravana) சொல்கிறார்:

  கண்ணீரை ஏற்படுத்துகிறது

 5. sandhya சொல்கிறார்:

  கவிதை படிச்சு மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ..

 6. royal ranger சொல்கிறார்:

  எங்கோ படித்து"என் கல்லறை மீது எழுதுங்கள்,என் மரணத்திற்கு காரணம்என் தாய் மொழி என்று – ஈழ தமிழன்

 7. சின்னப்பயல் சொல்கிறார்:

  "இரவுகள் கடக்கும் நேரத்தில் எல்லாம்சிறகுகளில் சிலுவைகள் சுமக்கிறதுஉள்ளம் .!"நல்லாருக்கு சங்கர்.

 8. வானம்பாடிகள் சொல்கிறார்:

  மீண்டும் அனுபவித்த கலக்கம்.:(

 9. வெறும்பய சொல்கிறார்:

  கொன்று குவித்ததுஉடல்களை மட்டும் இல்லைதமிழனின் உணர்வுகளையும்தான் .!//துணை போவதும் தமிழ் ரத்தங்கள் தான்..

 10. ஹேமா சொல்கிறார்:

  மறக்க நினைத்தாலும் மனதிலேயே காயமாகிவிட்ட மாறாத வடுக்கள்.

 11. அருண் சொல்கிறார்:

  //காக்கைக்கும் , கழுகுக்கும்பங்காளி சண்டைஇறந்த தமிழனை யார் முதலில்ருசிப்பது என்று//மனதை தொடும் கவிதை வரிகள்,என்றும் ஆறாத ரணங்கள் உங்கள் கவிதையில் தெரிகிறது.

 12. நாடோடி சொல்கிறார்:

  வ‌லித‌ரும் வ‌ரிக‌ளில் க‌விதைக‌ள்..

 13. Chitra சொல்கிறார்:

  மனதில் ஒரு வலி.!

 14. பிரவின்குமார் சொல்கிறார்:

  என்னத்த சொல்லுறது.. தல..!!! ஆறுதலுக்காய்…. இதுபோன்ற கவிதைகள் மட்டுமே.. எஞ்சியுள்ளது என்பதை நினைவுபடுத்தும் கனமான வரிகள்… படித்த பின் ரணமாகிப்போனது… எம் மனதும்… மீண்டும் ஆறுதலுக்காய் ஒருமுறை வாசிக்கிறேன்.

 15. முனியாண்டி சொல்கிறார்:

  தமிழ் மாநாட்டில் தமிழன் சுடுகாட்டில் … தமிழ் பந்தலில் தமிழன் பாடையில் … தமிழ் ஏட்டில் தமிழன் வயுத்துபாட்டி

 16. vadakarai appan சொல்கிறார்:

  best kavithaikal… eeram kannil thanks

 17. Sriakila சொல்கிறார்:

  // கொன்று குவித்தது உடல்களை மட்டும் இல்லை தமிழனின் உணர்வுகளையும்தான் //

 18. சிங்கக்குட்டி சொல்கிறார்:

  மீண்டும் மீண்டும் படித்தாலும் அருமையாக இருக்கிறது சங்கர்.

 19. சே.குமார் சொல்கிறார்:

  வ‌லித‌ரும் க‌விதைக‌ள்.

 20. R.TAMIL ELAKKIYA சொல்கிறார்:

  maruthu pona idhayatin maraka mudiyatha vasagangal unmai than !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s