நினைவுகளின் இரணங்கள் – கவிதைகள்

மோகத்தில் முகம் புதைத்த
கணங்கள் எல்லாம் இன்னும்
தீராத கானல் நீர்தான் .
கல் விழுங்கப் போகும்
இரவைப்போல் இன்னும் பார்வையின் தடங்கள்
மாறாமலேயே காத்திருக்கிறேன்.
என்ன செய்வது
நீ என்னைக் கடந்து பல மணிநேரம்
ஆகிவிட்டது தெரிந்தும் .
ல்லவேளை என் வீட்டுக் கண்ணாடிக்கு
கால்கள் இல்லை இருந்தால்
என் வீட்டை விட்டு ஓடியே போயிருக்கும்.
இருக்காதா பின்னே ! உன்னுடன் பேசமுடியாத
வார்த்தைகளை எல்லாம் அதைப் பார்த்தே அல்லவா
பேசிக்கொண்டு இருக்கிறேன் இடைவெளிகள் இன்றி .
வானொலியில் வரும்
நேயர் விருப்பத்தில் எல்லாம்
நான் விரும்பும் பாடல்களே ஒலிக்கவேண்டும்
என்று நினைப்பது எந்த வகையில் நியாயம்.!?
இருந்தும் எப்பொழுதாவது கேட்க நேர்ந்தால்
பார்வைகள் ஜன்னல் வழியே
உன் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது அனுமதியின்றியே .
ன் நினைவுகளை எப்படி
உறங்க வைப்பது என்று சற்று கற்றுக் கொடு
நேற்று எல்லாம் விடியும் வரை உறங்கவே இல்லை
என் நினைவுகளால் , நீயும்,
உன் நினைவுகளால் நானும் !
னவுகளுக்கு காவல் இருக்கும் காதலனாய்
நான் மட்டும்தான் இருக்கக் கூடுமோ
என்னவோ தெரியவில்லை .
ந்தன் கூந்தல் கலைக்கும் காற்றைக்கூட
திரும்பிப் பார்த்துவிட்டுச் செல்கிறாய் புன்னகையுடன்.
ஆனால் நீ ஒவ்வொருமுறை பார்க்கும்பொழுதும்
கலைந்து போகிறேனே முழுதாய் ! ஏன்தான்
என்னை மட்டும் பார்க்க மறுக்கிறாயோ ?
த்தனை ரணங்களையும் உள்ளுக்குள்
மறைத்து, மறந்திருந்ததை நான்
ஒரு நாள் உன்னிடமே கேட்டுவிட்டேன் .
இத்தனை நாட்களில் ஒரு நொடி கூட
என் நினைவுகள் உன்னைத் தொடவில்லையா ?
யுதமாய் பதில் சொன்னாய் .
நீ மறந்திருப்பாய் என்று நினைத்தேனென்று !.
நான் சொன்னேன் நீ இறந்திருப்பாய்
என்று நினைத்தேனென்று சொல் ஏற்றுக்கொள்கிறேன்!
னால்
மறந்திருப்பேன் என்று மட்டும்
சொல்லாதே இறந்துவிடுவேன் என்று !!!!!
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in கனவுகள், கவிதை மற்றும், கவிதைகள், காதல், நினைவுகள், மோகம், Tamil Kadhal Kavithaigal SMS, Writer shankar. Bookmark the permalink.

33 Responses to நினைவுகளின் இரணங்கள் – கவிதைகள்

 1. என்னது நானு யாரா? சொல்கிறார்:

  எளிய நடையில கவிதை சொல்லி அசத்திட்டீங்க! ரொம்ப நல்லா இருக்கு கவிதை… கவிதை…———————————–நண்பர்களே! பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே! ———————————-

 2. கலாநேசன் சொல்கிறார்:

  //நல்லவேளை என் வீட்டுக் கண்ணாடிக்குகால்கள் இல்லை இருந்தால்என் வீட்டை விட்டு ஓடியே போயிருக்கும்.// நல்லா இருக்குங்க…

 3. அட்டகாசமாய் இருக்கு, சங்கர்.

 4. Mohamed Faaique சொல்கிறார்:

  நல்லாயிருக்கு….

 5. r.v.saravanan சொல்கிறார்:

  எளிய நடையில கவிதை நல்லா இருக்குசங்கர்

 6. பத்மா சொல்கிறார்:

  ஷங்கர் அனைத்து கவிதைகளும் அருமை ..மிகவும் ரசித்து படித்தேன் ..

 7. வெறும்பய சொல்கிறார்:

  அத்தனை கவிதைகளும் அருமை நண்பரே..

 8. சே.குமார் சொல்கிறார்:

  எளிய நடையில கவிதை…ரொம்ப நல்லா இருக்கு.

 9. தமிழரசி சொல்கிறார்:

  எந்த வரி சிறந்ததென்று சொல்ல தெரியலை அத்தனை காதல் சொட்டுகிறது அத்தனையிலும் ஒவ்வொரு பத்தியும் பாராட்டனும் அழகா புரியும்படி காதல் சொன்ன விதம் அருமை சங்கர்…

 10. எளிமையா சொல்லியிருக்கீங்க. நல்லயிருக்குது.

 11. வானம்பாடிகள் சொல்கிறார்:

  /ஆனால்மறந்திருப்பேன் என்று மட்டும்சொல்லாதே இறந்துவிடுவேன் என்று !!!!!/:). நல்லாருக்கு

 12. ம.தி.சுதா சொல்கிறார்:

  //…இத்தனை ரணங்களையும் உள்ளுக்குள்மறைத்து, மறந்திருந்ததை நான்ஒரு நாள் உன்னிடமே கேட்டுவிட்டேன் .இத்தனை நாட்களில் ஒரு நொடி கூடஎன் நினைவுகள் உன்னைத் தொடவில்லையா ?…//அருமையாக இருக்கிறது…

 13. சிவராம்குமார் சொல்கிறார்:

  நல்லா இருக்கு… ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்க!

 14. கோவை ஆவி சொல்கிறார்:

  /ஆனால்மறந்திருப்பேன் என்று மட்டும்சொல்லாதே இறந்துவிடுவேன் என்று !!!!!/ இறந்துவிடுவேன் இன்று — என்று முடிந்திருக்க வேணுமோ? எழுத்துப் பிழையோ? புரிதலில் குறையோ?எதுவாயினும் கவிதை அருமை!!!

 15. "தாரிஸன் " சொல்கிறார்:

  //உன் நினைவுகளை எப்படிஉறங்க வைப்பது என்று சற்று கற்றுக் கொடுநேற்று எல்லாம் விடியும் வரை உறங்கவே இல்லைஎன் நினைவுகளால் , நீயும்,உன் நினைவுகளால் நானும் !//உணர்வு பூர்வமான வரிகள் … பாராட்டுக்கள்…….!!

 16. sarvesh சொல்கிறார்:

  .கவிதை கவர்கின்றது.வாழ்த்துக்கள்.

 17. அருண் சொல்கிறார்:

  கவிதை உணர்சிகளை வெளிக்காட்டுகிறது,தொடருங்கள்.

 18. ப்ரின்ஸ் சொல்கிறார்:

  உணர்வுப்பூர்வமான ஒரு படைப்பு ….. மிக நேர்த்தியாக இருந்தது அருமை நண்பரே!

 19. SAMSUDEEN சொல்கிறார்:

  உன் கூந்தல் கலைக்கும் காற்றைக்கூடதிரும்பிப் பார்த்துவிட்டுச் செல்கிறாய் புன்னகையுடன்.ஆனால் ஒவ்வொருமுறை உனை பார்க்கும்பொழுதும் நான் கலைந்து போகிறேனே முழுதாய் ! ஏன்தான்என்னை மட்டும் பார்க்க மறுக்கிறாயோ ?என்று இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.வாழ்த்துக்கள்

 20. அஹமது இர்ஷாத் சொல்கிறார்:

  ரொம்ப நல்லாயிருக்கு கவிதை சங்கர்..

 21. HEART TOUCHING LINES ARE பகல் விழுங்கப் போகும்இரவைப்போல் இன்னும் பார்வையின் தடங்கள்மாறாமலேயே காத்திருக்கிறேன்.CONGRATS

 22. @சி.பி.செந்தில்குமார்தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!

 23. @என்னது நானு யாரா?தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!

 24. Chittoor.S.Murugesan சொல்கிறார்:

  பாஸ் !கழுகு வலைச்சரத்துல வெளியான வல்லரசு கனவுகளை படிச்சு கமெண்ட் போட்டிருந்திங்க. அந்த திட்ட சுருக்கத்தையாச்சும் பத்து பேருக்கு ஷேர் பண்ணலாமே

 25. JMBatcha சொல்கிறார்:

  சங்கர் ஜீ கவிதை என் காதலையும் நினைவு படுத்து கிறது… கொண்ணுபுட்டீங்க..

 26. JMBatcha சொல்கிறார்:

  சங்கர் ஜீ கவிதை என் காதலையும் நினைவு படுத்து கிறது… கொண்ணுபுட்டீங்க..

 27. gunalakshmi சொல்கிறார்:

  ஆழமான கருத்துக்களை அழகான வரிகளில் கொடுத்திருக்கீங்க…மிகவும் அழகு…தோழரே…

 28. gunalakshmi சொல்கிறார்:

  ஆழமான கருத்துக்களை அழகான வரிகளில் கொடுத்திருக்கீங்க…மிகவும் அழகு…தோழரே…

 29. padaipali சொல்கிறார்:

  நச்சின்னு இருக்கு நண்பா..

 30. iman raja சொல்கிறார்:

  nice………….

 31. iman raja சொல்கிறார்:

  nanba innum neraya anupunga

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s