ஈழம் கவிதைகள் – தமிழா தமிழா

மிழா !  தமிழா !
இன்னும் என்னடா எதிர்பார்ப்பு..?!!
உன் உறவுகள் அழிந்தது போதாதா..??!
அதனால் நீ இரவுகள் தொலைத்ததும் போதாதா..?!!
டமைகள் இழந்தாய்..! இருப்பிடம் தொலைத்தாய்..!
உறவுகள் கதற காதுகேளாதவனாய்
தமிழ்..! தமிழ்..! தமிழன் என்றாய்..!
இன்று உன் கண்முன் உன் உறவுகளின் ஒப்பாரி..!
எல்லாம் இயலும் என்ற உன் நம்பிக்கைகள்,
ஊனமாய் எதுவும் இயலாது
முள்வெளிகளுக்குள் கண்ணீருடன் இன்று ..!
நாங்கள் இன்னுமொரு
பிணம் ரசிக்கவா..??
நீ இன்னும் அங்கு நின்றுகொண்டு
தமிழன்..! தமிழன்..! என்கிறாய்..!
ன் சுவாசம் தவணை முறையில் தரப்படுகிறது.
தீர்ந்துபோகும் கொடுத்த கேடு என்று
ஆவேசமாய் நீ உள்ளிழுக்கும்
காற்றில் எல்லாம் இன்னும்
தீர்ந்து போகாத பிண வாடை ..!
டையின்றி தானே பிறந்தாய்..??!?!
இப்பொழுது எதற்கு உனக்கு ஆடை என்று உருவப்பட்டாய்..!!
அப்பொழுதும் தமிழன்..! தமிழன்..! என்றாய்..!
ஆஹா..! நிர்வாணமாய் ஒரு மனிதன்
என்று சொல்லவா..!,,
இல்லை, அய்யோ பாவம்
என் தமிழன் என்று சொல்லவா…!!!

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in இலங்கை, ஈழம், கவிதைகள், தமிழன் உணர்வுகள், EELAM AGATHIGAL kavithai, Eelam kavithaigal, Tamil eelam, Tamil Kavithai, tamila tamila. Bookmark the permalink.

22 Responses to ஈழம் கவிதைகள் – தமிழா தமிழா

 1. சே.குமார் சொல்கிறார்:

  //நிர்வாணமாய் ஒரு மனிதன்என்று சொல்லவா..!,,இல்லை, அய்யோ பாவம் என் தமிழன் என்று சொல்லவா…!!!//இந்த வரிகள் முழுக்கவிதையையும் சொல்கிறது.கவிதை படிக்கும்போது மனசு வலிக்கிறது.

 2. என்னது நானு யாரா? சொல்கிறார்:

  கையறு நிலையை நன்கு விளக்குகிறது கவிதை! பகிர்வுக்கு நன்றி!

 3. எஸ்.கே சொல்கிறார்:

  மனதை கனக்க வைக்கிறது.

 4. வானம்பாடிகள் சொல்கிறார்:

  வலி வலி 😦 விடிவே அற்ற வலி.

 5. கவிதாமணி சொல்கிறார்:

  வணக்கம் நண்பரே…கவிதை அருமை.நண்பரிடம் ஓர் உதவி…கவிஞ்கர் காசி அனந்தன் ஈழத் தமிழர் திளிப்பன் உண்ணா விரதம் இருந்தப்போது திளிப்பைனுக்காக எழுதிய கவிதை கிடைக்குமா?கிடைத்தால் எனது மின் அஞ்சலுக்கு அனுப்பும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.நட்புடன்,கவிதாமணிMail: kavithamani@sify.comWeb: http://www.kavithamanikavithaigal.blogspot.com

 6. ஈழவன் சொல்கிறார்:

  அருமையான கவிதை, பாராட்டுக்கள்.

 7. மகாதேவன்-V.K சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் அருமை அருமை

 8. சத்ரியன் சொல்கிறார்:

  //தமிழன்..! தமிழன்..!//???????????????????????????????கிருக்கிறான்.

 9. rk guru சொல்கிறார்:

  அற்புதமான கவிதைகள்….வாழ்த்துகள்

 10. ஹேமா சொல்கிறார்:

  சொல்லத் தெரியவில்லை.உடைத்துவிட்டிருக்கிறீர்கள்மீண்டும் சங்கர் !

 11. அருண் சொல்கிறார்:

  வலிகளை வெளிப்படுத்தும் வரிகள்,அருமை நண்பரே.

 12. ம.தி.சுதா சொல்கிறார்:

  ஃஃஃ…நாங்கள் இன்னுமொருபிணம் ரசிக்கவா..??நீ இன்னும் அங்கு நின்றுகொண்டுதமிழன்..! தமிழன்..! என்கிறாய்..!ஃஃஃசகோதரம் இந்த வரிகளைக் கேட்டாவது யாரும் திருந்த மாட்டார்களா..? ஒரு கவிஞன் படிக்கிறான் எலிக்கறி பொரிப்பதுவோ.. என்கிறான். உன்ர மகனை இங்கு அனுப்பு என்று கேட்டால் அனுப்புவானா..? எங்களை உசுப்பேத்தி அவர்களுக்கு குளிர் காய்ந்து பழகீட்டுது..

 13. அன்னு சொல்கிறார்:

  //ஆவேசமாய் நீ உள்ளிழுக்கும்காற்றில் எல்லாம் இன்னும்தீர்ந்து போகாத பிண வாடை ..!//கனத்த வரிகள்! அதை விட கனக்கும் நிஜம்.

 14. மதிபாலா சொல்கிறார்:

  என்னமோ போங்கள். வரிகள் நண்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் என்ன சொல்ல விழைகிறீர்கள்? குழப்பமாக இருக்கிறது. என்ன பண்ணலாம்.?செத்துப்போனவன் தொலையட்டும்,இருக்கறவன் பிழைப்புவாத சகதியில் அமர்ந்து சுயநலமாய் வாழட்டும் என்கிறீர்களா?இதை தமிழ்நாட்டுத்தமிழர்கள் சொல்லக்கூடாது. இவர்கள் தான் மொழியுணர்வு , பகுத்தறிவு என்று கிளப்பி விட்டவர்கள்…இது போன்ற வாதங்களெல்லாம் நம் போன்றவர்களின் சுயநலத்தால் வருவது. நம் போன்றவர்களின் இயலாமை – இயலாமை என்று சொல்வது தவறு. கையாலாகாத் தனத்தால் வருகிற பேச்சுக்கள்.நெடுநாளாக அரசியல் பேசக்கூடாது என்றே நினைத்தேன். இன்னும் பலரும் இப்படியே இப்படிப் பட்ட போக்கிலே பேசுவதால் எழுத நேரிட்டது. மன்னிக்க .

 15. padaipali சொல்கிறார்:

  வார்த்தைகளின் வலியை பிரதிபலித்திருக்கிறீர்கள்..நெஞ்சம் கனக்கிறது

 16. R.TAMIL ELAKKIYA சொல்கிறார்:

  inimaiyana kavithai varigal ! nam tamilargalai ninaikumbothu nam raththam kothikerathu,ethanai tamilargali kodumai seitha elangai oliyattum , enna seiya tamillargaluku eezhm illaiye , mana varutham than minjugirathu !

 17. karthisivi சொல்கிறார்:

  Enath tamil unarvu ithai padithavudan innum melongukirthu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s