உங்கள் பனித்துளி தமிழ்மண நட்சத்திரமாக

னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள். இந்த வார தமிழ்மணம் நட்சத்திரப் பதிவர் என்ற ஒரு சிறப்பை தந்து உங்கள் அனைவரையும் சந்திக்கும் இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு  எனது  நன்றிகள் கோடி . என்னைப் பற்றிய விவரங்களை உங்களுடன் சிறிது பகிர்ந்துகொள்வதில்  பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
  எனது பெயர்  சங்கர்  பின்பு எப்படி பனித்துளி சங்கர் என்று மாறியது   என்பது பலரின் கேள்விகள்  !?. இதற்கு இன்று விடை தந்தே ஆகவேண்டும். உதடுகள் உதிர்கின்ற  வார்த்தைகளிலெல்லாம் என்னை அறியாமலே  அவ்வப்பொழுது சில முரண்பாடுகள் முகம் காட்டி  விடுகின்றன. வார்த்தைகளில் இல்லாத மென்மை எனது பெயரிலாவது இருக்கட்டுமே என்று  பனித்துளி என்று விளையாட்டாக சேர்த்துக்கொண்டேன்  ஆனால் அதுவே இன்று பெயராக நிலைத்துவிட்டது.
ரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். பெயரின் காரணம்தான் இப்படி என்றால் நான் வசிக்கும் இடத்தைப் பற்றியத் தகவல் இன்னும்  வினோதமானது  . நான் இரண்டு மாவட்டங்களுக்கு சொந்தக்காரன். இதைப்  பற்றி பேச ஆரம்பித்தால் பல மணி நேரங்கள் தொலைந்து போகலாம் . இதைப் பற்றிய சுவராசியமான  தகவல்களை  மற்றொரு பதிவில் விரிவாக சொல்கிறேன்  . நான் சொல்ல முனைந்த மாவட்டங்களின் பெயர்களை மட்டும் இப்பொழுது அறிந்துகொள்வோம்  ஒன்று முத்தமிழின் பிறப்பிடம்   ( மதுரை  ) மற்றொன்று மருதுகள் வாள் வீசி விருதுகள் பல வென்ற  வீரத்தின் பிறப்பிடமான சீமை ( சிவகங்கை சீமை) . ஆனால் தற்பொழுது  ஏக்கங்களையும் , எதிர்பார்ப்புகளையும்  அமீரகம்  ( துபாய் ) போன்ற  வெளிநாடுகளில் அடகு வைத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான  இளைஞர்களின்  பட்டியலில் எனது பெயரும் ஒன்றாக  இருக்கும்  என்று அவ்வப்பொழுது தோன்றி மறையும்  சிறிது நேர உறவுகளின் உரையாடல்களில் இந்த சோகங்கள் அனைத்தையும் தொலைத்து இதழ்களில் சாயம் பூசிய போலியான புன்னகை உதிர்த்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சராசரி இளைஞன் . எனக்கு பிடித்தது என்று சொல்வதைவிட எனது தொழில் என்று சொல்லலாம்  அறிந்துகொள்ளும் ஆர்வம். நான் எழுதுவதை விட வாசிப்பதில்  அதிக நேரத்தை கரைக்கத் துடிக்கும் ஒரு கிறுக்கன்.
வெற்றுக் காகிதங்கள் தவிர அனைத்தையும் வாசித்தே ஆகவேண்டும்  என்று   ஆர்வத்தின் ஒரு முனையைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறது  இவனின் குட்டி இதயம்  . எழுதுகிறேன் என்ற பெயரில் ஏதாவது ஒன்றை கிறுக்குவது, இசை, விளையாட்டு, மகிழ்ச்சி, வாசித்தல், புதுமையாய் சிந்திப்பது, புன்னகையுடன் பேசுவது, கோபமாக நடிப்பது, மனிதர்களை தேடுவது, மனிதனாக இருப்பது, அன்பை தொலைப்பது, நட்பை திருடுவது எல்லாம் இன்றே நாளை என்பதில் நம்பிக்கை இல்லை எனக்கு. முடியாது என்பது முற்றுப்புள்ளி எட்டும் வரை. முடியும் என்பது தொடற்புள்ளியாகும் வரை கிறுக்கிக்கொண்டே இருப்பேன் இப்படி ஏதாவது ஒன்றை .!
ண்பர்களே இது எனது தமிழ்மண நட்சத்திர  வாரத்தின் முதல் நாள்  . இதுவரை நீங்கள் எதிர்பாராத பல வியப்பான வினோத  தகவல்கள் மற்றும் கவிதைகள்  என என்னால் இயன்ற வரை உங்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் எனது இந்த வாரப்  படைப்புகள் அமையும் என்ற எண்ணத்தில்  இந்த அறிமுகப் பதிவுடன் இந்த வாரத்தை சிறப்பிக்கத் தொடங்குகிறேன்  . மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்  .

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in அறிமுகம், தமிழ்மணம்.star blogger Panithuli shankar, நட்சத்திரப் பதிவர், நட்சத்திரம், Star Bloger, thamizmanam. Bookmark the permalink.

63 Responses to உங்கள் பனித்துளி தமிழ்மண நட்சத்திரமாக

 1. அருண் பிரசாத் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சங்கர்!

 2. வானம்பாடிகள் சொல்கிறார்:

  வாழ்த்துகள் சங்கர்:)

 3. சே.குமார் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சங்கர்….துபாயிலா இருக்கிறீர்கள்…?

 4. இராமசாமி கண்ணண் சொல்கிறார்:

  வாழ்த்துகள் சங்கர் 🙂

 5. ரவிச்சந்திரன் சொல்கிறார்:

  நட்சத்திர வாழ்த்துகள்!

 6. T.V.ராதாகிருஷ்ணன் சொல்கிறார்:

  வாழ்த்துகள் சங்கர்:)

 7. Thekkikattan|தெகா சொல்கிறார்:

  நட்சத்திர வாழ்த்துக்கள், சங்கர்!

 8. நிலாமதி சொல்கிறார்:

  உங்களுக்கு என் வாழ்த்துக்களும் உரிதாகட்டும்

 9. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  நல்வாழ்த்துகள் சங்கர்

 10. அன்பரசன் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்…

 11. என்னது நானு யாரா? சொல்கிறார்:

  நீங்க நினைச்சபடியே நல்ல விஷய்ங்களை சொல்லுங்க! நாங்க கூட இருக்கோம்!வாழ்த்துக்கள்!

 12. சிவராம்குமார் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சங்கர்!

 13. வாழ்த்துக்கள் சங்கர், நல்ல அறிமுகம்.

 14. அமைதிச்சாரல் சொல்கிறார்:

  நட்சத்திர வாழ்த்துக்கள் சகோ.. நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்ள நல்ல களம். நாங்களும் காத்திருக்கோம் 🙂

 15. ஆனந்தி.. சொல்கிறார்:

  பனித்துளி..புது போஸ்ட் ஆ…பிரிச்சுடுங்க…ஆல் டி பெஸ்ட்..

 16. நாடோடி சொல்கிறார்:

  வாழ்த்துக்க‌ள் ச‌ங்க‌ர்.

 17. அஹமது இர்ஷாத் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சங்கர்!!!

 18. தியாவின் பேனா சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சங்கர்!

 19. பித்தன் சொல்கிறார்:

  உங்களுக்கு என் வாழ்த்துக்களும் உரிதாகட்டும்

 20. சின்ன அம்மிணி சொல்கிறார்:

  வாழ்த்துகள் சங்கர்

 21. Starjan ( ஸ்டார்ஜன் ) சொல்கிறார்:

  அருமையான அறிமுகம்.. தமிழ்மண நட்சத்திரமாய் ஜொலிக்க என் அன்பான வாழ்த்துகள்..

 22. ராமலக்ஷ்மி சொல்கிறார்:

  நட்சத்திர வாழ்த்துக்கள்!

 23. ப.செல்வக்குமார் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் அண்ணா ..!!!

 24. த.ஜீவராஜ் சொல்கிறார்:

  நட்சத்திர வாழ்த்துக்கள், சங்கர்

 25. சுசி சொல்கிறார்:

  நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்..அருமையான விவரிப்பு.

 26. டி.பி.ஆர் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சங்கர்!

 27. அம்பிகா சொல்கிறார்:

  நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

 28. வில்சன் சொல்கிறார்:

  ஹாய் சங்கர், கண்டிப்பாக உங்களால் தமிழ்மணம் நறுமணம் கமழும். உங்களின் இந்த பதிவின் மூலம் உங்கள் வார்த்தைகளில் மென்மை குறைவு என்று நீங்கள் கூற அறிந்தேன். எனது பதிவுலக நண்பர்கள் சிலரிடம் துவக்கத்தில் உங்களை பற்றி கேட்ட போது "தலைக்கனம் பிடித்தவன்" என்றனர். ஆனால் புதிய பதிவரான என்னை ஊக்குவித்து வளரச் செய்ததில் முக்கிய பங்கு உங்களைத்தான் சாரும். அதனால் என்னைப் பொறுத்தவரை நீங்கள் என்றும் பனித்துளி தான். வாழ்த்துக்கள்!!!

 29. கே.ஆர்.பி.செந்தில் சொல்கிறார்:

  நட்சத்திர வாழ்த்துக்கள், சங்கர்!

 30. வரதராஜலு .பூ சொல்கிறார்:

  நட்சத்திர வாழ்த்துக்கள்

 31. எஸ்.கே சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சார்!

 32. Kousalya சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் இன்னும் பல சிறப்புகளை பெறுவதற்கும்….!!

 33. சௌந்தர் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் நண்பரே

 34. நந்தா ஆண்டாள்மகன் சொல்கிறார்:

  நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

 35. வாழ்த்துக்கள், ஆர்வத்தோடு தொடர்கிறோம்!

 36. drbalas சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்……!!!

 37. அ.வெற்றிவேல் சொல்கிறார்:

  நட்சத்திர வாழ்த்துகள்..அசத்துங்கள்

 38. அ.வெற்றிவேல் சொல்கிறார்:

  நட்சத்திர வாழ்த்துகள்..அசத்துங்கள்

 39. நசரேயன் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்

 40. Dileep சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சங்கர்.தொடர்க உங்கள் தேடல்கள்

 41. அப்பாதுரை சொல்கிறார்:

  உளமார்ந்த வாழ்த்துக்கள்!

 42. கண்ணகி சொல்கிறார்:

  நட்சத்திர வாழ்த்துகள்….

 43. வருண் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள், பனித்துளி சங்கர்!

 44. நியோ சொல்கிறார்:

  தோழருக்கு அன்பின் வாழ்த்துக்கள்!

 45. Selvaraj சொல்கிறார்:

  நீங்கள் மின்னும் நட்சத்திரம்! உங்களை தமிழ்மணம் இந்த வார நட்சத்திரமாக தெரிந்தெடுத்தது அவர்களுக்கு சிறப்பு!! வாழ்த்துக்கள், தொடர்ந்து மின்னிட!!!

 46. ஈழவன் சொல்கிறார்:

  எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள் சங்கர்.

 47. Jaleela Kamal சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்

 48. ம.தி.சுதா சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சகோதரா… தொடரட்டும் தங்களின் தமிழ் காக்கும் பணி…

 49. கோமதி அரசு சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சங்கர்!

 50. சுரேகா.. சொல்கிறார்:

  நட்சத்திரத்துக்கு அன்பு வாழ்த்துக்கள் !

 51. Dinesh Kannan.C சொல்கிறார்:

  Congratulation anna……………….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s