விஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள் அதிசயத் தகவல்கள் !!

னைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது வணக்கங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் . இந்த உலகத்தில் தேடல் என்ற ஒன்று பல புதுமைகளையும் கணக்கற்ற அதிசயங்களையும் நமக்கெல்லாம் தந்திருக்கிறது என்பது அதை முயற்சித்து வென்ற அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . சரி இந்த தேடல் எங்கு தோன்றியது எப்பொழுது எதற்காக என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு சரியான விடை தேடுவதும் ஒரு தேடல்தான் இப்படி ஒரு சாதாரண கேள்வியில் தொடங்கி நாம் எல்லோரும் இன்று அத்தியாயத்துடன் அன்னார்ந்துப் பார்க்கும் பல அரிய கண்டுபிடிப்புகளை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்ததும் இந்த தேடல் என்ற ஒரு உந்து சக்திதான்.
 சரி இந்த தேடல் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த தேடலுக்கும் இன்றைய இன்று ஒரு தகவலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று பலருக்கும் பல கேள்விகள் எழலாம் சொல்கிறேன். இந்த உலகில் யார் ஒருவன் தான் எடுத்த செயலில் வெற்றிப் பெறுகிறானோ அவன் அனைவராலும் பாராட்டப்படுகிறான். அதே நிலையில் அவன் தோல்வியுற்றால் அவனை யாரும் கண்டு கொள்வதே இல்லை. இதுவரை எடுக்கப்பட்டுள்ள கணக்கின்படி இந்த உலகத்தில் தோல்விகள் இன்றி எந்த ஒரு கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்கிறது ஒரு அறிக்கை. சரி இனி தகவலுக்கு வருவோம்.
ன்றைய நிலையில் உலகத்தில் புதிய கண்டுபிடிப்புகளை விட நமது முன்னோர்கள் கண்டுபிடித்தவற்றை முறையாக கையாளுவது ஒரு மிகப்பெரிய அதிசயமாக தோன்றுகிறது அனைவருக்கும். ஆனால் இன்று நாம் பயன்படுத்தும் பல அரிய கருவிகள், மருந்துகள் என பலவற்றை நமக்கு கண்டுபிடித்து பரிசளித்த பல விஞ்ஞானிகளின் தொடக்க நிலைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை அவர்களுக்காகத்தான் இந்த இன்று ஒரு தகவல்.

பொதுவாக பாம்பைக் கண்டால் படையும்  நடுங்கும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது . இதைப் பற்றி நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . அப்படிப்பட்ட பாம்புகள் நம் கனவில் வந்தால் நம் எல்லோருக்கும் அன்றைய உறக்கம் ஒரு கனவாகத்தான் மாறிப்போகும் .ஆனால் ஒரு அறிவியல் அறிக்கை சொல்கிறது பாம்பு கனவில் வந்தால் மிகவும் நல்லது என்று நம்புவீர்களா !?
 

 உண்மைதான் நண்பர்களே இன்று உலகத்தில் உயிர் காக்கும் மருந்துகளில் முன்னோடியாக விளங்கும் பென்ஸீன் மூலக்கூறு கண்டறிய அலெக்சாண்டர் ஃப்ளெமிங் நீண்ட நாட்களாக முயன்றும் அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பாம்பு, புதிய வடிவத்தை உணர்த்திவிட்டுச் சென்றது. அதற்குப் பின்னரே அவர் பென்சிலினுக்கான மூலக்கூறு (பென்ஸீன் கூட்டமைப்பு) வடிவத்தை கண்டு பிடித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அதுமட்டும் இல்லை

ப்படித்தான் ஒரு முறை உயிர் காக்கும் பென்சிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் ஃப்ளெமிங், துப்பாக்கி சுடுவதில் கில்லாடியாம். முதல் உலகப் போரின் போது எதிரிப் படையினர் ஒரே நேரத்தில் பத்துக்கும் அதிகமானோர் இவரை நோக்கி ஆயுதங்களுடன் வரவே இவரின் அருகில் இருந்த ஒரு வீரன் இவரை நோக்கி என்னிடம் உள்ள துப்பாக்கியில் ஒரே ஒரு குண்டுதான் உள்ளது வாருங்கள் அவர்களிடம் மண்டியிடுவோம் என்று அழைத்திருக்கிறார்.
 தற்கு பதில் அளித்த ஃப்ளெமிங் ஒரு குண்டு இருக்கிறதே அது போதும் நான் ஒரே நேரத்தில் ஒரு குண்டை வைத்து பத்து வீரர்களையும் வென்று விடுவேன் என்று தனது கைகளின் இருந்த அமிலப் பாட்டிலை நூறு அடிக்கு அதிகமான துரத்தில் வருபவர்களை நோக்கி வீசி குறி தவறாமல் சுட்டிருக்கிறார் அந்த அமிலப் பாட்டில் வெடித்து சிதறியதில் அந்த வீரர்கள் மட்டும் இல்லாது அதன் அருகில் இருந்த பல வெடிகுண்டு கிடங்குகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறி நானுறுக்கும் அதிகமான வீரர்கள் இறந்து போனார்களாம், அது மட்டும் இல்லாது குண்டடி பட்டு விழுந்த வீரர்களுக்குப் போர் முனையில் டாக்டராக இருந்தும் உயிர் காத்து தனது நாட்டிற்கு அரும்பணி செய்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .
விஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள் அதிசயத் தகவல்கள் தொடரும்

 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in Alexander Fleming, அறிவியல், உலகம், தகவல்கள், நிகழ்வுகள், மருத்துவம், மருந்து. Bookmark the permalink.

17 Responses to விஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள் அதிசயத் தகவல்கள் !!

 1. மைந்தன் சிவா சொல்கிறார்:

  ஒரு குண்டு இருக்கிறதே அது போதும் நான் ஒரே நேரத்தில் ஒரு குண்டை வைத்து பத்து வீரர்களையும் வென்று விடுவேன் என்று தனது கைகளின் இருந்த அமிலப் பாட்டிலை நூறு அடிக்கு அதிகமான துரத்தில் வருபவர்களை நோக்கி வீசி குறி தவறாமல் சுட்டிருக்கிறார்//எம்மாம் பெரிய ஆளு…அம்மாடியோவ் …நல்ல தகவல் இன்றையது

 2. பிரவின்குமார் சொல்கிறார்:

  தல.. மிக அருமையான சுவாரஸ்யமான தேடல்..! வர வர புதுமையான தகவல்கள் நிறைய கொடுத்து பின்னுறிங்க… எசமான்.!! தொடர்ந்து பல அரிய தகவல்களை அளித்து எங்களை ஆச்சரியததில் ஆழ்த்துவீர்கள் என நம்புகிறேன்.

 3. Chandramohan சொல்கிறார்:

  பென்ஜீன் வடிவத்தை முதலில் கண்டுபிடித்து வெளியிட்டவர் பிரெட்றிச் அகுஸ்ட் கெகுலே, அலெக்ஸ்சாண்டர் பிளமிங் இல்லை. பென்ஜீனின் வடிவம் வட்ட வடிவம். ஒருநாள், கெகுலே பகலில் தூங்கும்போது ஒரு பாம்பு அதன் வாலை அதன் வாயாலேயே விழுங்குவதைப்போல் கனவு கண்டார். அப்பொழுது அந்தப்பாம்பு வட்டவடிவமாக தெரிந்தது. அதைவைத்துத்தான் பென்ஜீனும் இதைபோல் வடிவத்தில் அமையும் என்று தீர்மானித்து அதை வெளியிட்டார். இதை வெளியிட அவருக்கு ஏழு ஆண்டுகள் ஆனது.இதைபோன்று சிறு பிழைக்காக தொடர்ந்து எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்.மோகன் நடராஜன் அமெரிக்கா

 4. மனசாட்சியே நண்பன் சொல்கிறார்:

  அருமையான தகவல் நன்றி

 5. புதிய தென்றல் சொல்கிறார்:

  உங்களது ப்ளாக் ரொம்ப நல்ல இருக்கு. வாழ்த்துக்கள்.

 6. எம்.ஞானசேகரன் சொல்கிறார்:

  எல்லாமே வியத்தகு செய்திகளாய் இருக்கின்றன. நாம் கண்டுபிடிப்பதை விட்டுத்தள்ளுங்கள். கண்டுபிடித்ததை தெரிந்து கொள்ளவே நமக்கு ஒரு ஆயுசு பத்தாது.

 7. gunalakshmi சொல்கிறார்:

  அருமை தோழரே… மிகவும் நன்றாக இருந்தது உங்கள் பதிவு மேலும் தொடருங்கள்… கூடவே கொஞ்சம் உங்க வாலு பிரவின்குமாரை கண்டிச்சு வையுங்க.. உங்க பெருமைய பாடிக்கிட்டே இருக்காரு…

 8. Sarbath சொல்கிறார்:

  அறிய தகவல்…தொடருங்கள்…

 9. அரிய தகவல்தான்!! பகிர்வுக்கு நன்றி சங்கர்.

 10. வெறும்பய சொல்கிறார்:

  அருமையான தகவல்

 11. VELU.G சொல்கிறார்:

  நல்ல தகவல்கள் சங்கர்

 12. VELU.G சொல்கிறார்:

  நல்ல தகவல்கள் சங்கர்

 13. Parthasarathi Subramanian சொல்கிறார்:

  அதேபோல் “Lysozyme” என்னும் antibacterial நொதியையும் (enzyme) இவர் தான் கண்டு பிடித்தார்.
  ஆராய்ச்சி கூடதிதில் வேலை செய்துகொண்டு இருக்கும் போது, மூக்கில் இருந்து வந்த சளி ஒரு சொட்டு அவரின் பாக்டீரியா பாட்டிலில் (petri plate) விழுததாம். அடுத்த நாள் பார்த்த போது, ஒரு வட்டம் அவரின் சளியை சுற்றி இருந்ததை கண்டிருக்கிறார். இந்த lysozyme நம் உடலில் தான் உற்பத்தியாகிறது. கண்ணீர், சளி, தாய் பால் இதில் உள்ளது. இப்படியாக ஒரு கதை உண்டு.

 14. அருண் குமார் சொல்கிறார்:

  கோடி நன்றிகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s