பிரமிடுகள் அதிசயத்தின் அதிசயத் தகவல்கள் – PART 1

னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள்  அதிக வேலை பளு , பதிவுகள் எதுவும் புதிதாக கொடுக்க இயலாத நிலை !. நண்பர்களின் பதிவுகளை வாசித்து மறுமொழி இடுவதற்கு நேரமின்மை என பல சிரமமான சூழ்நிலையில் கடந்த வாரத்தின் நாட்களுடன் ஆயுதங்கள் எதுவும் இன்றியே சண்டையிட்டு கழித்துவிட்டேன் . எவ்வளவு வேலை பளு இருந்தாலும் உங்களின் அனைவரையும் இந்த தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் சந்தித்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் எனது முதல் பதிவை ஒரு அறியத் தகவலுடன் தொடங்கி இருக்கிறேன். சரி இனி விசயத்திற்கு வருவோம்.
லகத்தில் பொதுவாக மனிதன் மட்டும் இல்லாது எந்த ஒரு உயிரினத்திற்கும் வெளிப்படையாக இருக்கும் ஒன்றைவிட மறைத்து வைத்திருக்கும் ஒன்றின் மீதுதான் ஆர்வம் அதிகரிப்பதாக ஒரு குறிப்பு சொல்கிறது நாமும் அதை ஆராயத் தொடங்கினால் இந்த பதிலைத் தவிர புதிதாக ஒன்றும் நமக்கு கிடைப்பதில்லை என்பது உண்மை. சரி இந்த மறைந்து இருக்கும் ஒன்றிற்கும் இன்றையத் தகவலுக்கும் என்ன தொடர்பு என்று பலருக்கு பல கேள்விகள் தோன்றலாம். சொல்கிறேன் .
ன்று நாம் எல்லோரும் இந்த இன்று ஒரு தகவலின் வாயிலாக உலகத்தில் கற்பனையில் கூட நம்மால் எண்ணிப் பார்க்க இயலாத பல மர்மங்களையும், அதிசயங்களையும் தனக்குள் உள்ளடக்கி தனித் தன்மையுடன் காட்சித் தரும் பிரமிடுகளைப் பற்றிய பல பிரமிப்பானத் தகவல்களை நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம் .
ம் அனைவருக்கும் பிரமிடுகள் பற்றி ஓரளவிற்கு அதன் அடிப்படைத் தகவல்கள் தெரிந்திருக்கும் என்பதால் நான் நேராக தகவலுக்கு வருகிறேன் . 
ந்த பிரமிடுகள் பற்றி நாம் அறிவதற்கு முன்பாக ஒரு நகரத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் அலெக்சாண்டிய நகர் அப்படி என்ன இந்த நகரத்தில் இருக்கிறது என்று நம் எல்லோருக்கும் பல சந்தேகங்கள் எழலாம் சொல்கிறேன் .
முதல் முதலில் ரோமானியர்கள் கடல்வழியாக வந்து தங்களின் சாம்ராஜியத்திற்கு முதல் பாதம் இந்த நகரத்தின் மண்ணில்தான் பதிக்கப் பாதிக்கப்பட்டு இருக்கிறது . அதுமட்டும் இல்லை ரோமானியர்கள் தங்களின் பெயரை உலகம் எப்பொழுதும் மறக்காமல் மனதில் வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவே கட்டடக் கலையில் பல நுணுக்கங்களை கையாண்ட இடமும் இதுதான். இதையும் தாண்டி வியப்பான ஒரு சிறப்பு இந்த நகரத்தில் என்னவென்றால். இங்கு வசிக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கை இன்று பத்து மில்லியனையும் தாண்டிக்கொண்டிருக்கிறது. உலகத்தில் மிகப்பெரிய நகரம் என்ற ஒரு தனி சிறப்பே இதற்கு இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இங்குதான் நாம் இன்று பார்க்கப்போகும் உலகத்தின் மிகவும் பழமைவாய்ந்த அதிசய பிரமிடுகள் பல கட்டப்பட்டு இருக்கின்றது.
ங்கு கட்டப்பட்ட பிரமிடுகளிலேயே மிகவும் வியப்பிற்குரிய ஒன்று கய்சா ப்லாடீவ்  ( GIZA PLATEAW ) . இதில் என்ன அப்படி சிறப்பு என்றால் .இவை உலகின் கண்டங்களையும் கடல்களையும் சரிபாதியாகப் பிரிக்கும் மெரிடியன் என்ற கோட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ளன. 26,00,000 பாறைகள்இதனை கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.  இதன் ஆரங்கள் மென்மையாகத் தேய்த்து துளியும்சந்து இல்லாமல் பொருத்தியிருக்கிறார்கள்.
 மாவீரன் நெப்போலியன் அவர் காலத்தில் ஒருமுறை சொற்பொழிவின் போது இந்த பிரமீடு நானுறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இறுதிக் கணக்கின் படி இந்த பிரமீடு (890 ) எண்ணுற்று தொன்னுராம் ஆண்டிற்கு முன்பு இந்த இடம் ஒரு போர்க்களமாக இருந்ததாகவும் . அங்கு இருந்து பிணங்களை நீக்குவதற்கே பல மாதங்கள் ஆகியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள் . எகிப்து நாட்டில் பிரமிடுகளுக்கு அருகில் ஸ்பிங்க்ஸ் என்ற ஒரு பெண் தேவதையின் உருவச்சிலை உண்டு. அந்த உருவச்சிலை பெண்ணின் தலையையும், சிங்கத்தின் உடலையும் கொண்டதாக இருக்கின்றது.இதே போன்ற ஓர் உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாக சோவியத்விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ந்த பிணங்கள் இங்கு எப்படி வந்தது  !!!!!!!!!!!!!?????
அதன் பின்பு இந்த பழமை வாய்ந்த மர்ம பிரமீடுகள் எப்படிக் கட்டப்பட்டது !!!!!!!!? ?????
அதன் பின் அதற்குள் நடந்த திடுக்கிடும் நிகழ்வுகள் என்ன என்பதை இந்த பதிவின் அடுத்தப் பகுதியில் சொல்ல இருக்கிறேன் ஆவலுடன் காத்திருங்கள் .
றக்காமல் உங்களின் கருத்துகளையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Posted in அறிய, உலகம், எகிப்த், தகவல்கள், நிகழ்வுகள், பிரமிடுகள், pyramids | 48 பின்னூட்டங்கள்

உங்கள் பனித்துளி தமிழ்மண நட்சத்திரமாக

னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள். இந்த வார தமிழ்மணம் நட்சத்திரப் பதிவர் என்ற ஒரு சிறப்பை தந்து உங்கள் அனைவரையும் சந்திக்கும் இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு  எனது  நன்றிகள் கோடி . என்னைப் பற்றிய விவரங்களை உங்களுடன் சிறிது பகிர்ந்துகொள்வதில்  பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
  எனது பெயர்  சங்கர்  பின்பு எப்படி பனித்துளி சங்கர் என்று மாறியது   என்பது பலரின் கேள்விகள்  !?. இதற்கு இன்று விடை தந்தே ஆகவேண்டும். உதடுகள் உதிர்கின்ற  வார்த்தைகளிலெல்லாம் என்னை அறியாமலே  அவ்வப்பொழுது சில முரண்பாடுகள் முகம் காட்டி  விடுகின்றன. வார்த்தைகளில் இல்லாத மென்மை எனது பெயரிலாவது இருக்கட்டுமே என்று  பனித்துளி என்று விளையாட்டாக சேர்த்துக்கொண்டேன்  ஆனால் அதுவே இன்று பெயராக நிலைத்துவிட்டது.
ரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். பெயரின் காரணம்தான் இப்படி என்றால் நான் வசிக்கும் இடத்தைப் பற்றியத் தகவல் இன்னும்  வினோதமானது  . நான் இரண்டு மாவட்டங்களுக்கு சொந்தக்காரன். இதைப்  பற்றி பேச ஆரம்பித்தால் பல மணி நேரங்கள் தொலைந்து போகலாம் . இதைப் பற்றிய சுவராசியமான  தகவல்களை  மற்றொரு பதிவில் விரிவாக சொல்கிறேன்  . நான் சொல்ல முனைந்த மாவட்டங்களின் பெயர்களை மட்டும் இப்பொழுது அறிந்துகொள்வோம்  ஒன்று முத்தமிழின் பிறப்பிடம்   ( மதுரை  ) மற்றொன்று மருதுகள் வாள் வீசி விருதுகள் பல வென்ற  வீரத்தின் பிறப்பிடமான சீமை ( சிவகங்கை சீமை) . ஆனால் தற்பொழுது  ஏக்கங்களையும் , எதிர்பார்ப்புகளையும்  அமீரகம்  ( துபாய் ) போன்ற  வெளிநாடுகளில் அடகு வைத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான  இளைஞர்களின்  பட்டியலில் எனது பெயரும் ஒன்றாக  இருக்கும்  என்று அவ்வப்பொழுது தோன்றி மறையும்  சிறிது நேர உறவுகளின் உரையாடல்களில் இந்த சோகங்கள் அனைத்தையும் தொலைத்து இதழ்களில் சாயம் பூசிய போலியான புன்னகை உதிர்த்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சராசரி இளைஞன் . எனக்கு பிடித்தது என்று சொல்வதைவிட எனது தொழில் என்று சொல்லலாம்  அறிந்துகொள்ளும் ஆர்வம். நான் எழுதுவதை விட வாசிப்பதில்  அதிக நேரத்தை கரைக்கத் துடிக்கும் ஒரு கிறுக்கன்.
வெற்றுக் காகிதங்கள் தவிர அனைத்தையும் வாசித்தே ஆகவேண்டும்  என்று   ஆர்வத்தின் ஒரு முனையைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறது  இவனின் குட்டி இதயம்  . எழுதுகிறேன் என்ற பெயரில் ஏதாவது ஒன்றை கிறுக்குவது, இசை, விளையாட்டு, மகிழ்ச்சி, வாசித்தல், புதுமையாய் சிந்திப்பது, புன்னகையுடன் பேசுவது, கோபமாக நடிப்பது, மனிதர்களை தேடுவது, மனிதனாக இருப்பது, அன்பை தொலைப்பது, நட்பை திருடுவது எல்லாம் இன்றே நாளை என்பதில் நம்பிக்கை இல்லை எனக்கு. முடியாது என்பது முற்றுப்புள்ளி எட்டும் வரை. முடியும் என்பது தொடற்புள்ளியாகும் வரை கிறுக்கிக்கொண்டே இருப்பேன் இப்படி ஏதாவது ஒன்றை .!
ண்பர்களே இது எனது தமிழ்மண நட்சத்திர  வாரத்தின் முதல் நாள்  . இதுவரை நீங்கள் எதிர்பாராத பல வியப்பான வினோத  தகவல்கள் மற்றும் கவிதைகள்  என என்னால் இயன்ற வரை உங்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் எனது இந்த வாரப்  படைப்புகள் அமையும் என்ற எண்ணத்தில்  இந்த அறிமுகப் பதிவுடன் இந்த வாரத்தை சிறப்பிக்கத் தொடங்குகிறேன்  . மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்  .
Posted in அறிமுகம், தமிழ்மணம்.star blogger Panithuli shankar, நட்சத்திரப் பதிவர், நட்சத்திரம், Star Bloger, thamizmanam | 63 பின்னூட்டங்கள்

ஈழம் கவிதைகள் – தமிழா தமிழா

மிழா !  தமிழா !
இன்னும் என்னடா எதிர்பார்ப்பு..?!!
உன் உறவுகள் அழிந்தது போதாதா..??!
அதனால் நீ இரவுகள் தொலைத்ததும் போதாதா..?!!
டமைகள் இழந்தாய்..! இருப்பிடம் தொலைத்தாய்..!
உறவுகள் கதற காதுகேளாதவனாய்
தமிழ்..! தமிழ்..! தமிழன் என்றாய்..!
இன்று உன் கண்முன் உன் உறவுகளின் ஒப்பாரி..!
எல்லாம் இயலும் என்ற உன் நம்பிக்கைகள்,
ஊனமாய் எதுவும் இயலாது
முள்வெளிகளுக்குள் கண்ணீருடன் இன்று ..!
நாங்கள் இன்னுமொரு
பிணம் ரசிக்கவா..??
நீ இன்னும் அங்கு நின்றுகொண்டு
தமிழன்..! தமிழன்..! என்கிறாய்..!
ன் சுவாசம் தவணை முறையில் தரப்படுகிறது.
தீர்ந்துபோகும் கொடுத்த கேடு என்று
ஆவேசமாய் நீ உள்ளிழுக்கும்
காற்றில் எல்லாம் இன்னும்
தீர்ந்து போகாத பிண வாடை ..!
டையின்றி தானே பிறந்தாய்..??!?!
இப்பொழுது எதற்கு உனக்கு ஆடை என்று உருவப்பட்டாய்..!!
அப்பொழுதும் தமிழன்..! தமிழன்..! என்றாய்..!
ஆஹா..! நிர்வாணமாய் ஒரு மனிதன்
என்று சொல்லவா..!,,
இல்லை, அய்யோ பாவம்
என் தமிழன் என்று சொல்லவா…!!!

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

Posted in இலங்கை, ஈழம், கவிதைகள், தமிழன் உணர்வுகள், EELAM AGATHIGAL kavithai, Eelam kavithaigal, Tamil eelam, Tamil Kavithai, tamila tamila | 22 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் ‘Indru Oru Thagaval’- மிதக்கும் அதிசய அங்காடி

னைவருக்கும் வணக்கம் நண்பர்களே . இன்று நாம் வசிக்கும் இந்த பூமிக்கு இயற்கைகள் அழகு சேர்த்ததை விட அதிகம் அழகு சேர்த்தவர்கள் மனிதர்களாகிய நாம்தான் என்று சொல்லவேண்டும் !.

யற்கை” இதுவரை யாராலும் சரியாக விளக்கம் சொல்ல இயலாத ஒரு அதிசயம் !. ஆனால் இந்த அதிசயத்தையும் அதிசயிக்க வைக்கும் அளவிற்கு. யதார்த்தங்கள் அனைத்திற்கும் புதுமைகள் சேர்த்து அவற்றை அன்னார்ந்துப் பார்க்க செய்த பெருமை மனிதர்களாகிய நம்மையே சேரும். இந்த துறைதான் என்று நில்லாமல் காற்றைப்போல் கட்டுப்பாடுகள் இன்றி தனது கற்பனைகளை அரங்கேற்றி ரசித்து இருக்கிறார்கள் இன்றும் ரசித்துக் கொண்டிருக்கிறது நமது மனித இனம்.

தவை அடைத்து திறவுகோலை தெரிந்தே தொலைத்தார்கள் . அதிலும் ஓவியத்தால் திறவுகோல் இல்லாத பாதை ஒன்றை அமைத்தான் மனிதன். பறந்து செல்லும் பறவைகளை அன்னார்ந்து பார்த்த அதே மனிதனை விமானம் என்ற ஒன்றை வென்று பறவைகளை விட உயரத்தில் பறக்கச் செய்து ரசித்தான் !.
தூரத்து நிலவைக் காட்டி சோறு ஊட்டிய அதே பெண் இனத்தை நிலவுக்கே சென்று சோறுட்டு என்று ஆனந்தமாய் அனுப்பி வைத்தான் மனிதன் . இவ்வளவு பரப்பரப்பான உலகத்தையும் சில வினாடிகளில் அழிக்கும் சக்தியையும் உருவாக்கினான் மனிதன் . இப்படி மனிதனின் திறமைகளை சொல்லிக்கொண்டே போகலாம் .

ரி இவற்றிற்கும் இன்றைய இன்று ஒரு தகவலுக்கும் என்ன தொடர்பு என்று பலருக்கு குழப்பமாக இருக்கலாம் சொல்கிறேன் . பொதுவாக உலகத்தில் நமக்கு தேவையான எந்த ஒரு பொருளும் ஏதேனும் ஒரு இடத்தில் கிடைக்கும் வகையில்தான் கடைகளோ , அல்லது விடுதிகளோ , அல்லது சந்தைகளோ அமைந்திருக்கும் ஆனால் ஒரு நாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே ஒரு மிகப் பெரிய மார்க்கெட்டை உருவாக்கி தண்ணீரில் மிதக்க விட்டு இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா..?!! உண்மைதான் நண்பர்களே.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளதாம் இங்குதான் இந்த அதிசய மார்க்கெட்டை உருவாக்கி நீரில் மிதக்கும் வகையில் செய்து வியாபாரம் செய்து வருகிறார்களாம். தரைகளில் அதிக இட வசதிகள் இருந்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இது போன்ற ஒரு புதுமையை உருவாக்கி இருக்கிறார்களாம் . இதில் மிகவும் வியப்பான தகவல் என்னவென்றால் . ஒரு நாள் ஒன்றிற்கு ஒரு கோடிக்கும் அதிகம் மதிப்புள்ள பொருட்கள் வியாபாரம் ஆகிறதாம் இந்த மிதக்கும் அதிசய அங்காடியில் !.

ந்த நகரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா வரும் மக்கள் அனைவரும் தங்களுக்கென்று ஒரு தனித் தனி படகுகளை எடுத்துக்கொண்டு இந்த மிதக்கும் மார்க்கெட்டிற்கு சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது மட்டும் இல்லாது இந்த மிதக்கும் மார்க்கெட்டில் மொத்த நகரத்திலும் தேடிக் கிடைக்காத பொருட்கள் கூட இங்கு கிடைக்கும் என்று அவர்கள் சொல்வது அனைத்திலும் வியப்பான செய்திதான் !. அதுமட்டும் இல்லாது இந்த மார்க்கெட்டில் இருக்கும் மொத்தப் பொருட்களையும் வெளியேற்றுவதற்கு ஆயிரம் வேலையாட்களை நியமித்தாலும் நான்கு நாட்கள் ஆகும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எவ்வளவு பொருட்கள் இங்கு கிடைக்கும் என்று .

வை அனைத்திலும் மிகவும் வியப்பான செய்தி என்னவென்றால் இதில் மொத்தம் எட்டு ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்க்கிறார்களாம். என்ன நண்பர்களே..! இன்றைய இந்த மிதக்கும் மார்க்கெட் தகவலுடன் நீங்களும் நீண்ட தூரம் மகிழ்ச்சியுடன் மிதந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரியத் தகவலுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

* * * * * * * * *
Posted in அங்காடிகள், அதிசயங்கள், உலகம், தகவல் மற்றும், நிகழ்வுகள், மார்க்கெட், Thagaval mayyam | 23 பின்னூட்டங்கள்

நினைவுகளின் இரணங்கள் – கவிதைகள்

மோகத்தில் முகம் புதைத்த
கணங்கள் எல்லாம் இன்னும்
தீராத கானல் நீர்தான் .
கல் விழுங்கப் போகும்
இரவைப்போல் இன்னும் பார்வையின் தடங்கள்
மாறாமலேயே காத்திருக்கிறேன்.
என்ன செய்வது
நீ என்னைக் கடந்து பல மணிநேரம்
ஆகிவிட்டது தெரிந்தும் .
ல்லவேளை என் வீட்டுக் கண்ணாடிக்கு
கால்கள் இல்லை இருந்தால்
என் வீட்டை விட்டு ஓடியே போயிருக்கும்.
இருக்காதா பின்னே ! உன்னுடன் பேசமுடியாத
வார்த்தைகளை எல்லாம் அதைப் பார்த்தே அல்லவா
பேசிக்கொண்டு இருக்கிறேன் இடைவெளிகள் இன்றி .
வானொலியில் வரும்
நேயர் விருப்பத்தில் எல்லாம்
நான் விரும்பும் பாடல்களே ஒலிக்கவேண்டும்
என்று நினைப்பது எந்த வகையில் நியாயம்.!?
இருந்தும் எப்பொழுதாவது கேட்க நேர்ந்தால்
பார்வைகள் ஜன்னல் வழியே
உன் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது அனுமதியின்றியே .
ன் நினைவுகளை எப்படி
உறங்க வைப்பது என்று சற்று கற்றுக் கொடு
நேற்று எல்லாம் விடியும் வரை உறங்கவே இல்லை
என் நினைவுகளால் , நீயும்,
உன் நினைவுகளால் நானும் !
னவுகளுக்கு காவல் இருக்கும் காதலனாய்
நான் மட்டும்தான் இருக்கக் கூடுமோ
என்னவோ தெரியவில்லை .
ந்தன் கூந்தல் கலைக்கும் காற்றைக்கூட
திரும்பிப் பார்த்துவிட்டுச் செல்கிறாய் புன்னகையுடன்.
ஆனால் நீ ஒவ்வொருமுறை பார்க்கும்பொழுதும்
கலைந்து போகிறேனே முழுதாய் ! ஏன்தான்
என்னை மட்டும் பார்க்க மறுக்கிறாயோ ?
த்தனை ரணங்களையும் உள்ளுக்குள்
மறைத்து, மறந்திருந்ததை நான்
ஒரு நாள் உன்னிடமே கேட்டுவிட்டேன் .
இத்தனை நாட்களில் ஒரு நொடி கூட
என் நினைவுகள் உன்னைத் தொடவில்லையா ?
யுதமாய் பதில் சொன்னாய் .
நீ மறந்திருப்பாய் என்று நினைத்தேனென்று !.
நான் சொன்னேன் நீ இறந்திருப்பாய்
என்று நினைத்தேனென்று சொல் ஏற்றுக்கொள்கிறேன்!
னால்
மறந்திருப்பேன் என்று மட்டும்
சொல்லாதே இறந்துவிடுவேன் என்று !!!!!
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Posted in கனவுகள், கவிதை மற்றும், கவிதைகள், காதல், நினைவுகள், மோகம், Tamil Kadhal Kavithaigal SMS, Writer shankar | 33 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் – உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள அதிசயக் கடிகாரம் ( 02.09.2010 )

னைவருக்கும் வணக்கம் . சில வாரங்களாக அதிக வேலை பளு . அதுதான் பதிவுகள் புதிதாக எதுவும் தர இயலாத நிலை .நண்பர்களின் பதிவுகளை வாசிக்கும் வாய்ப்புகளும் தொலைவில் சென்றதாக உணரவைத்தது கடந்த சில நாட்கள் . ஆனால் இன்று பல நாட்கள் சுவாசிக்க மறுத்த நுரையீரல் மீண்டும் சுவாசிக்க தொடங்கியதாக உணர வைக்கிறது உங்களை மீண்டும் சந்திக்கும் இந்த அழகியத் தருணம் . சரி நண்பர்களே இந்த நீண்ட இடைவெளியை நிரப்பும் ஒரு அறிய தகவல் பற்றி இன்று நாம் இன்று ஒரு தகவலில் அறிந்துகொள்ளப் போகிறோம் .

சரி இனி விஷயத்திற்கு வருவோம் . பொதுவாக நம்மில் பலருக்கு சில நிகழ்வுகள் வியப்பாக இருக்கும் . ஆனால் அதே நிகழ்வுகளோ அல்லது தகவல்களோ சிலருக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவது இல்லை .ஆனால் இன்னும் சில காட்சிகளோ அல்லது தகவல்களோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி செல்லும் . அந்த வகையில் நேற்று என்னை வெகு நேரமாக வியப்பில் ஆழ்த்தி சென்றது ஒரு கடிகாரம் . என்னடா இவன் ஒரு கடிகாரத்தை பற்றி இவளவு சொல்கிறானே .!
 
ப்படி வியப்பை ஏற்படுத்தும் அளவில் அந்தக் கடிகாரத்தில் என்னதான் இருக்கப்போகிறது !?  என்று நீங்கள் கேட்க நினைப்பது போலவே நானும் மனதில் பல கேள்விகளுடன் அதை பார்க்கத் தொடங்கினேன் . முதலில் எனக்கு ஒன்றும் அதில் புரியவில்லை . பின்பு சிறிது நேரத்தில் எல்லாம் மிகவும் ஆர்வத்துடன் அந்த கடிகாரத்துடன் ஒன்றி போய்விட்டேன் .
லகத்தில் ஒரு நாள் ஒன்றுக்கு எத்தனை ஜனனம் நிகழ்கிறது ., ஒரு நாளில் எத்தனை மரணம் நிகழ்கிறது , அதில் எத்தனை விபத்துக்களால் நிகழ்கிறது , எத்தனை இயற்கை மரணம் , ஒரு நாளில் எவளவு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது , ஒரு நாளில் எத்தனை சட்ட விரோதமான செயல்கள் நிகழ்கிறது , ஒரு நாளில் செலவிடப்படும் பணத்தின் அளவு , ஒவ்வொரு நாட்டின் பணத்தின் மதிப்பு , ஒரு நாளில் உலகத்தில் மொத்தம் மனித இனத்தால் உருவாக்கப் படும் சக்தி , ஒரு நாளில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை , ஒரு நாளில் விற்கப்படும் பொருட்களின் மதிப்பு , ஒரு நாளில் அவசர தேவைகளுக்காக அழைக்கப்படும் அழைப்புகளின் எண்ணிக்கை ., ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை ,என்று நாம் உலகத்தில் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் பற்றிய தகவல்கள் ஒரு சிறு கடிகாரதிற்குள் அடங்கி இருக்கிறது என்றால் நம்புவீர்களா !?.
ண்மைதான் நண்பர்களே ! எனக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்திய அந்த கடிகாரம் உங்களையும் வியப்பில் ஆழ்த்தும் என்ற நம்பிக்கையில்தான் இந்த தகவலை நீங்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பதிவிட்டிருக்கிறேன் . இதில் இன்னும் என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால் உலகத்தில் ஒரு நிமிடத்தில் நிகழும் மரணத்தைவிட பல நூறு மடங்குக்கும் அதிகமான ஜனனம் நிகழ்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .இந்த தகவல்களை நாம் ஒரு நாளில் நிகழும் மாற்றங்கள் என்றோடு மட்டும் இல்லாமல் , ஒரு மணிநேரத்தில் இருந்து ஒரு நிமிடத்திற்குள் உலகத்தில் நிகழும் மாற்றங்களையும் அறிந்துகொள்ளும் அளவில் இந்த கடிகாரம் இயங்குகிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்த அதிசயக் கடிகாரத்தை நான் சொல்வதை விட பார்த்து அறிந்துகொள்வதில் இன்னும் பல வியப்புகளை ஏற்ப்படுத்தலாம் .
ந்த அதிசயக் கடிகாரத்தை நீங்களும் பார்த்து வியப்பதற்கு
இந்த சுட்டியை அழுத்துங்கள் .
ன்ன நண்பர்களே இன்றைய இன்று ஒரு தகவலில் அதிசயக் கடிகாரம் பற்றியத் தகவல் உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் என்றும் நம்புகிறேன் . இதுபோன்று இன்னும் நாம் அறியாத , பார்க்காத பல வியப்பான தகவல்கள் இனி வரும் ஒவ்வொரு இன்று ஒரு தகவலிலும் வெளிவர இருக்கிறது . எப்பொழுதும் இந்த பனித்துளிசங்கருடன் இணைந்திருங்கள் அறிந்துகொள்வோம் இன்னும் புதுமைகள் பல .
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Posted in அதிசய உலகம், அதிசய தகவல்கள், இன்று ஒரு தகவல், கடிகாரம் | 38 பின்னூட்டங்கள்

காதல் சிலுவைகள்

தீர்ந்து போன
நினைவுகளின் மிச்சங்களில்
எல்லாம் இன்னும்
அவளை பற்றிய கனவுகளே
தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் !
வசர வாழ்க்கையினூடே
எப்பொழுதோ தொலைந்துப்போன
புன்னகையின் அழுகுரல்
எங்கேனும் செவியெட்டித்
தொலைக்கின்றன !
பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ ,
முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ
வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில்
மறைந்துபோகும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.!
ழைப்பேசியின்
எதிர்பாராத அழைப்புகள் .,
முடிய மறுக்கும்
நீண்டதொரு தொலைபேசி
உரையாடல்கள் .,
உறவுகளின்
அன்பு விசாரிப்புகள் என
ஏதாவதொன்று
மீண்டும் அவளின் நினைவுகளை
என் இதயத்தில் தள்ளி
தாழிட்டு செல்கின்றது.!
ருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!

இது எனது மீள் கவிதைகளில் ஒன்று !.
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
 
 
 
Posted in கவிதைகள், காதல் கவிதை, தமிழ் கவிதைகள், PANITHULI KAVITHAI, tamil kadhal kavithaigal in tamil font, Tamil Kavithaigal | 30 பின்னூட்டங்கள்